Thursday, August 25, 2022

இலவசங்களும் ஒரு கேள்விக்குறியும்

 



பெரு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும்

 

விலையில்லா இடம்,

விலையில்லா தண்ணீர்,

தடையற்ற மின்சாரம்,

வரி விடுமுறை,

வரிச் சலுகை,

வரிக் குறைப்பு,

வரி தள்ளுபடி,

வட்டி குறைப்பு,

வட்டி தள்ளுபடி,

கடன் தள்ளுபடி,

அடிமாட்டு விலையில் பொதுத்துறை நிறுவனங்கள்,

இன்னும் இன்னும் ஏராளமான சலுகைகள்

 

இவற்றால் அரசு கஜானாவுக்கு, இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்படும் இழப்பில் நூற்றில் ஒரு பங்கு கூட

 

ஏழை, நடுத்தர மக்களுக்கு அரிசியோ சைக்கிளோ, பேருந்துக் கட்டணமோ, விவசாயத்துக்கு மின்சாரமோ இல்லை வேறு பல திட்டங்களுக்கோ வழங்குவதால்

 

ஏற்படாது.

 

ஆனாலும் ஏழை மக்களுக்கு வழங்கப்படுவது மட்டும் இலவசம் என்ற பெயரால் கொச்சைப்படுத்தப்படுகிறது. விவாதப் பொருளாகிறது. நிறுத்த வேண்டும் என்று கூக்குரல் எழுகிறது.

 

முதலாளிகள் அனுபவிக்கும் சலுகைகள் குறித்து பேச்சே கிடையாது.

 

சலுகைகளுக்கு பெயர் வைப்பதிலும் அரசியல் இருக்கிறது. முதலாளி வர்க்க அரசியல். அதனால்தான் இலவசம் என்றால் எட்டிக்காயாய் சிலருக்கு கசக்கிறது. WAIVER, TAX HOLIDAY, REBATE, STRATEGIC SELLING, WRITE OFF ஆகியவை எல்லாம் ஒரு பிரச்சினையாகவே தெரிவதில்லை. இதனை எல்லாம் நம் நீதியரசர்கள் கேள்வி கேட்பார்களா என்பது ஒரு மிகப் பெரிய கேள்விக்குறி.

 

1 comment:

  1. இங்கு எந்த கேள்விக்குமே பதில்தரத் தயாராக இல்லாதபோது இந்த கேள்விக் குறியை எல்லாம் கவனிக்கவா போகிறார்கள்,
    நமது ஆற்றாமையை பகிர்ந்து கொள்ள வேண்டியதுதான்

    ReplyDelete