Sunday, August 28, 2022

பு.மா ஆஜானின் வழக்கமான அயோக்கியத்தனம்

 


மூத்த்த்த பத்திரிக்கையாளர் தனக்குத்தானே சாகித்ய அகாடமி விருது கொடுத்துக் கொண்ட போது பொங்கி எழாமல் ஒரே முதலாளியின் கீழே வேலை செய்பவர்கள் என்ற அடிப்படையில் வாழ்த்து சொல்லி நிறுத்திக் கொண்டார்.

சிரங்கு வந்தவன் கை சும்மா இருக்காது என்பது போல யுவ பிரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டவுடன் வழக்கமான வசையாடலை தொடங்கி விட்டார். 

ஜெமோவின் கூக்குரலை ஒரு தோழர் மெனக்கெட்டு அனுப்பி வைத்திருந்தார். அதன் பின்னே அவரது பக்கத்துக்கு சென்றேன்.

அவர் எழுதியது கீழே உள்ளது.

விருதுபெற்றிருக்கும் பி.காளிமுத்து கவிதைகளை இனிமேல்தான் எழுதவேண்டும். அதற்கு முன் அவர் தமிழில் எழுதப்பட்ட புதுக்கவிதைகளை வாசிக்கவேண்டும். கவிதை என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளவேண்டும். எதிர்காலத்தில் அவ்வண்ணம் நிகழுமென்றால் நன்று.

நடுவர்களாக இருந்த முனைவர் ஆர்.ராஜேந்திரன், டி.பெரிய சாமி, எம்.வான்மதி ஆகியோருக்கு தமிழ் கல்வித்துறையின் மரபின்படி தினத்தந்தி அளவுக்குக் கூட வாசிப்புப்பழக்கம் இருக்க வாய்ப்பில்லை. பயணப்படி, கௌரவஊதியம் தவிர சாகித்ய அக்காதமியில் அவர்களுக்கு அக்கறையேதும் இருக்கவும் நியாயமில்லை. அவர்களை நடுவர் குழுவுக்கு பரிந்துரைத்தவர்கள் ஆணையிட்டதைச் செய்திருப்பார்கள்.

பொள்ளாச்சியில் இருந்து இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்த உபாதை இருக்கும் என நினைக்கிறேன்.

இதைத் தவிர இன்னும் இரண்டு பதிவுகள் உள்ளது. ஏன் விருது தவறு என்று எதிலும் ஒரு வரி கூட எழுதவில்லை. விருது பெற்ற படைப்பை ஆய்வு செய்து விளக்கமாக எழுதினால்தானே ஆஜான் சொல்வது சரியா தவறா என்று நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் அப்படி எதுவும் இல்லை. 

அதனால் ஆஜானின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால் அவர் எழுதியுள்ளது எல்லாமே "மொட்டை வசை"

இன்னொன்று விருதுக்குழுவை எவ்வளவு இழிவு படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் இழிவு படுத்துகிறார்கள். அவர்களின் வாசிப்புப் பழக்கம் பற்றி இவரே அனுமானிப்பதெல்லாம் அயோக்கியத்தனம். கமலஹாசனைத் தவிர தமிழ்த் திரையுலகில் யாருக்குமே வாசிப்பு கிடையாது என்று சொல்வதிலேயே இவருடைய அறியாமை வெளிப்படுகிறது.

இவரின் காழ்ப்புணர்வுக்கான காரணம் கடைசி வரியில் உள்ளது. பொள்ளாச்சி உபாதை என்று அவர் சொல்வது கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியனை என்று பலரும் பகிர்ந்திருந்தார்கள். ஜெமோவின் அயோக்கியத்தனங்களுக்கு எதிரான ஒரு கண்டன அறிக்கையில் அவர் கையெழுத்திட்டிருந்ததுதான் ஆஜானின் எரிச்சலுக்குக் காரணம்.

எழுத்தாளரும் வழக்கறிஞருமான தோழர் இரா.முருகவேள் எழுதியிருந்ததை பகிர்வது முக்கியம் என்று நினைக்கிறேன்.

மக்கள் கலை.இலக்கியக் கழக தோழர்கள் சுந்தர ராமசாமியை கிண்டலான கிண்டல் செய்து ஒரு நூல் எழுதி இருந்தார்கள். கனவு நதி நனவின் குட்டை என்று நினைக்கிறேன். தலைப்பு கொஞ்சம் தவறாக இருக்கலாம்.

அதில் ஒவ்வொரு முறை சாகித்திய அகாடமி விருது கொடுக்கப் படும் போதும் துப்பாக்கி குண்டு போல சுந்தர ராமசாமி இடமிருந்து ஒரு கட்டுரை பாயும். அதில் அகாதமியின் வழிமுறைகளை வெளிப்படையாக வைக்க வேண்டும் என்று தவறாமல் சொல்வார் என்று சொல்லியிருப்பார்கள்.

அதே போல அவர் வாரிசான ஜெயமோகன் இரண்டு கட்டுரைகள் ரெடி மேட் ஆக வைத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன். விருது பெற்ற நூலை ' இது எழுத்தே இல்லை. நடையே இல்லை, இல்லை இல்லை என்றும் பலவாறாக வைதும் ஒரு கட்டுரை.

' விருது பெற்றவரை உலகுக்கு அறிமுகம் செய்ததே நான்தான், நான் தான் இலக்கியம், இலக்கியம் என்பது நான்தான் ..." என்று ஒரு கட்டுரை..

பரிசு பெறுபவர் யார் எவர் என்பதைப் பொறுத்து அதற்கேற்ற கட்டுரை பெயர்களை மாற்றி வெளியாகும்.

பொன்னியின் செல்வன் பட வெளியீட்டை வைத்து தன் மீது ஒளி வெள்ளம் பாய்ச்ச நினைத்த முயற்சி வெற்றி பெறாததால் யுவ புரஸ்காரை வைத்து செய்துள்ள முயற்சி இது.

மொத்தத்தில் இது புளிச்ச மாவு ஆஜானின் வழக்கமான அயோக்கியத்தனம் மட்டுமே. 


2 comments:

  1. மழைக்கு கூட இலக்கியம் பக்கம் ஒதுங்காத பாமரர் நம்ப........
    இலக்கிய மதிப்பில் மாலனும் காளிமுத்தும் ஒன்றல்ல என்பது படித்தவர்களுக்கு தெரியும். அதைத்தான் ஜெமோ சொல்கிறார். ஒருத்தர் அடிவாங்கியதை மகிழ்ந்து கொண்டாடும் வக்ரபுத்தியை முற்போக்கு போர்வையில் மறைக்கும் இத்தகைய நபர்கள் தான் முற்போக்கின் முதல் எதிரி.
    மாலன் அந்த அமைப்பில் இருப்பதால் வாங்கியது சரியல்ல என்றும் ஜெமோ சொல்லியிருக்கிறார். tag கலாச்சார அபிஷ்டுகளுக்கு இதெல்லாம் புரியுமா என்ன?

    ReplyDelete
    Replies
    1. நீர்தானய்யா அசட்டு அபிஷ்டு. மாலனுக்கு ஆஜான் வாழ்த்துதான் சொன்னாரு. தப்பென்று சொல்லவில்லை. அதே போல ஜெயமோகன் அடிவாங்கவில்லை. அடி வாங்கியதாய் கதை விடும் அயோக்கியன். அடுத்தவனோடு இலக்கிய தகுதி பற்றி முத்திரை குத்தும் யோக்கியதை எந்த ....................க்கும் கிடையாது. ........................... உமக்கும் புளிச்ச மாவுக்கும் பொருத்தமான கெட்ட வார்த்தையை நீரே நிரப்பிக் கொள்ளவும்.

      Delete