Thursday, October 8, 2020

மோடி – உடான்ஸின் மறுபெயர்

 


 சில நாட்கள் முன்பாக மோடி திறந்து வைத்த “அடல்” குகைப்பாதைதான் உலகிலேயே மிகவும் நீண்ட குகைப் பாதை என்று பாஜகவினர் பெருமை பேசினார்கள்.  2010 ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் துவக்கி வைக்கப் பட்ட  குகைப்பாதையை திறந்து வைத்த மோடி காங்கிரஸ் கட்சியின் செயலின்மையை சாடினார் என்பது வேறு விஷயம். என்ன நிகழ்ச்சி என்பது நினைவுக்கு வரவில்லையா? அதாங்க, ஒரே ஒரு போட்டோகிராபருக்காருக்காக மோடி கையாட்டினாரா, அந்த குகைதான் அது.

 “அடல்” குகைப்பாதை (காங்கிரஸ் ஆட்சியின் திட்டத்திற்கு உங்கள் ஆளோட பெயர் எதற்கு?) நிச்சயமாக இந்திய பொறியாளர்களின் திறமைக்கும் அர்ப்பணிப்புக்கும் உழைப்பிற்கும் ஒரு சான்று. பாடுபட்ட அனைவரையும் பாராட்டுவது நம் கடமையாகும்.

 சரி, சங்கிகள் சொல்வது போல ஒன்பது கிலோ மீட்டர் தூரம் கொண்ட இதுதான் உலகின் நீண்ட நெடுஞ்சாலை வழி குகைப்பாதையா?

 இல்லை, இல்லை,இல்லை.

 இதனை விட நீண்ட பத்து நெடுஞ்சாலை வழி குகைப்பாதைகள் உலகில் உள்ளன.

 

1)     Laerdal குகைப்பாதை நார்வேயில் உள்ளது – இதன் நீளம் 25 கிலோ மீட்டர்

 


2)   Yamate  குகைப்பாதை ஜப்பானில் உள்ளது – இதன் நீளம் 18.2 கிலோ மீட்டர்

 


3)   Zhognanshan குகைப்பாதை சீனாவில் உள்ளது – இதன் நீளம் 18  கிலோ மீட்டர்

                                 


           


4)   Jinping Shan குகைப்பாதை சீனாவில் உள்ளது – இதன் நீளம் 17.5 கிலோ மீட்டர்

   படம் கிடைக்கவில்லை


5)   St Gotthard குகைப்பாதை ஸ்விட்ஸர்லாந்தில் உள்ளது – இதன் நீளம் 16.9  கிலோ மீட்டர்

 


6)   Arl berg குகைப்பாதை ஆஸ்திரியாவில் உள்ளது – இதன் நீளம் 13.97  கிலோ மீட்டர்



 

7)   Xi shan குகைப்பாதை சீனாவில் உள்ளது – இதன் நீளம் 13.65 கிலோ மீட்டர்

                                            படம் கிடைக்கவில்லை


8)   Honngiguan குகைப்பாதை சீனாவில் உள்ளது – இதன் நீளம் 13.12  கிலோ மீட்டர்

                                                          படம் கிடைக்கவில்லை


9)   Hsuehashan குகைப்பாதை தைவானில் உள்ளது – இதன் நீளம் 12.94 கிலோ மீட்டர்

 


 

10)                Frejus குகைப்பாதை ஃபரான்ஸிலிருந்து  இத்தாலி செல்வதற்கான குகைப்பாதை.– இதன் நீளம் 12.89  கிலோ மீட்டர்

 

 


இவற்றில் ஜப்பானில் உள்ளது மட்டும் தரைக்கு அடியில் அமைக்கப்பட்ட  குகைப்பாதை. மற்றவை எல்லாம் மலையை குடைந்து உருவாக்கப்பட்டவைதான். உயரத்தில் அமைந்தவைதான்.

 

ரயில்வே குகைகள் என்று கணக்கிட்டால் ஏராளமானவை உள்ளது. 58 கிலோ மீட்டர் தூரமுள்ள பாதைதான் இன்றைய தேதியில் நீளமான ரயில் குகைப் பாதை.

 இத்தனை விபரங்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கையில் கொஞ்சமும் கூசாமல் பொய் விடுவதற்கு மோடி வகையறாக்களால் மட்டுமே முடியும்!

 எதற்கு இந்த வெட்டி பெருமை?

 “சின்ன வீடு” திரைப்படத்தில் கே.கே.சௌந்தர் பாக்கியராஜிடம் சொல்கிற “எதையெடுத்தாலும் ஒரு திருட்டுத்தனம், கேப்மாறித்தனம்” என்ற வசனத்தின் படியே சங்கிகள் வாழ்கிறார்கள்.

 பிகு: இவர்களின் டுபாக்கூர் தேச பக்தி தொடர்பாக சில நாட்கள் முன்பாக எழுதி ட்ராப்டிலேயே இருக்கும் இன்னொரு பதிவை சில நிமிடங்களில் பகிர்ந்து கொள்கிறேன்.

 

1 comment:

  1. Mutual sanghi'galukku prove Panna evvalavu research Panna vaendi irukku.

    ReplyDelete