Sunday, October 11, 2020

அடுத்த தலைமை நீதிபதியும் சூப்பரா?

 


ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கிற திரு என்.வி.ரமணா, சந்திரபாபு நாயுடு வுடன் சேர்ந்து ஆந்திர தலைநகர் அமராவதி அறிவிக்கைக்கு முன்பாக நில விவகாரங்களில் கோடிக்கணக்கான ரூபாய் ஆதாயம் அடைந்துள்ளார், ஆந்திர உயர் நீதி மன்ற விவகாரங்களில் தலையிட்டு தெலுங்கு தேச கட்சியினரின் ஊழல் வழக்குகளை மூடி மறைக்கவும் தனது ஆட்சியின் நடவடிக்கைகளை முடக்கி வைக்க முயல்வதாகவும் அக்கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.






இந்த நில விவகாரம் குறித்து ஊடகங்கள் எந்த செய்தியும் வெளியிடக் கூடாது என்று ஆந்திர உயர்நீதி மன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ளது கவனிக்க வேண்டிய செய்தி.

ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி பற்றி ஒரு முதலமைச்சர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதுவதும் அதை ஊடகங்களில் வெளியிடுவதும் இது நாள் வரை நடந்திராத ஒன்று.

ஜெகன் மோகன் ரெட்டியும் உத்தமனில்லை, சந்திரபாபு நாயுடுவும் உத்தமன் இல்லை.

அதனால் இந்த குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மை குறித்து நம்மால் உடனடியாக எதுவும் சொல்ல முடியும்.

ஆனால் ஒன்று சொல்ல முடியும்.

அவை உண்மை என்றால் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியும் தன் முன்னோர்களான

தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகாய், எஸ்.ஏ.பொப்டேவின் பாரம்பரியத்தை பாதுகாப்பார்.

ஆமாம்

என்.வி.ரமணா தான் அடுத்த தலைமை நீதிபதி

No comments:

Post a Comment