Sunday, October 18, 2020

எஸ்.பி.பி - நிறைவாக . . .


 

எஸ்.பி.பி க்கான இசையஞ்சலியின் நிறைவுப் பகுதி இது. 

இதற்கு முன்பாக ஒன்பது பதிவுகளில் அவர் பாடிய 151 பாடல்களின் காணொளிகளை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அவர் பாடல்களில் பதினொன்றை பாடும் நிலாவிற்கு வயலினில் அஞ்சலி

என்று என் மகன் வயலின் வாசித்ததையும் பகிர்ந்து கொண்டுள்ளேன். 

இப்பதிவில் நடிகராகவும் முத்திரை பதித்த எஸ்.பி,பி அவருக்கே பாடிய பாடல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

மண்ணில் இந்த காதலன்றி



சின்ன கண்மணிக்குள்ளே



வழி விடு, வழி விடு, என் தேவி வருகிறாள்



காதலிக்கும் பெண்ணின்



வண்ணம் கொண்ட வெண்ணிலவே



மிதுனம் என்ற தெலுங்குத் திரைப்பாடல் (என்னைப் போன்ற உணவுப் பிரியர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்)



நாற்பதாயிரம் பாடல்களில் வெறும் 158 பாடல்கள்தானா என்று எனக்குள்ளே ஒரு கேள்வி வந்தது. பதிலும் உடனே மனதில் தோன்றியது. 

எல்.ஐ.சி நிறுவனத்தை தனியார்மயமாக்க வேண்டும் என்று பரிந்துரை கொடுத்த மல்ஹோத்ரா குழு அறிக்கையை அமலாக்கக்கூடாது என்று 1994 ல் கையெழுத்து நடத்துகிறோம்.  நாடெங்கிலுமாக ஐம்பத்தி ஐந்து லட்சம் மக்கள் கையெழுத்திடுகின்றனர். 25.08.1994 அன்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அன்றைய தலைவர் தோழர் சரோஜ் சவுத்ரி  அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் அவர்களிடம் ஒப்படைக்கிறார். அப்போது நரசிம்மராவ் "100 கோடி மக்கட்தொகையில் ஐம்பத்தி ஐந்து லட்சமா?" என்று நக்கலாக கேட்கிறார். 

அன்று ஐம்பத்தி ஐந்து லட்சம் மக்களோடு துவங்கிய இயக்கம்தான் இன்று வரை எல்.ஐ.சி யை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாத்து வருகிறது. இத்தனை பாடல்களையும் நான் வேகமாக தரவிறக்கவும் பகிர்ந்து கொள்ளவும் இன்னொரு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் ஆப்டிகல் பைபர் இணைப்பே காரணம்.

ஆக இந்த 158 பாடல்கள் என்பது அவரது பாடல்களிலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட சாறு.  அதன் ருசி அதிகம்தான்.

மற்ற கலைஞர்களை விட ஏன் எஸ்.பி.பி மீது மக்கள் அதிகமான நேசத்தைக் காண்பித்தார்கள். தங்கள் இல்லத்து இழப்பாக ஏன் இன்னும் வருந்துகிறார்கள்?

குரலினிமைக்கா?

பாடும் திறனுக்கா?

அவர் பாடல்கள் அன்றாட வாழ்வின் அங்கமான காரணத்தாலா?

இவை அனைத்தும் உண்மை. இதைத் தாண்டி இன்னொரு முக்கியமான காரணம் உண்டு. அதை சொல்வதற்கு முன்பாக இன்னொரு காணொளியையும் பார்த்து விடுங்கள்.





இரண்டு இசை விற்பன்னர்களும் கொஞ்சம் கூட அகந்தை இல்லாமல் ஒருவரை ஒருவர் மதிக்கும் பாங்கு இருக்கிறதே, இதிலே கொஞ்சம் கூட நடிப்பில்லை. உண்மையான உணர்வன்றி வேறெதுவும் இல்லை.

தன் கலையை, சக கலைஞர்களை, மனிதர்களை நேசிக்கிற ஒரு முழுமையான மனிதராக எஸ்.பி.பி வாழ்ந்தார். 

அவர் நினைவு என்றும் நம் மனதில் வாழும். 

.... இசையஞ்சலி நிறைவுற்றது




No comments:

Post a Comment