Saturday, November 23, 2019

மானஸ்தனெல்லாம் எங்கய்யா போனீங்க?


கர்னாடகாவில் குமாரசாமியும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்த போது "தேர்தலின் போது எதிர்த்து போட்டியிட்டு விட்டு இப்போது ஆட்சி அமைப்பது நியாயமா?"

என்று 

அறம் பேசிய மானஸ்தர்களே,

தேர்தலுக்குப் பிறகு சிவசேனா முரண்டு பிடித்த போதும் பின்னர் மாற்று அரசு அமைக்க முயற்சித்த போதும்

"இதெல்லாம் பிளாக் மெயில்"

என்று விமர்சித்த அறவான்களே,

சரத் பவார் குடும்பத்துக்குள் குழப்பம் விளைவித்து தேர்தலின் போது எதிர்த்து போட்டியிட்ட தேசியவாதக் காங்கிரஸ் கட்சியை விலைக்கு வாங்கி அமைக்கப்பட்ட மகாராஷ்டிர ஆட்சியைப் பற்றி

வாய் திறக்காமல் கள்ள மவுனம் சாதித்தால் கூட பரவாயில்லை. ஆனால்
இதுதான் அமித் ஷாவின் சாமர்த்தியம் என்று பாராட்டுகிறீர்களே, 

எங்கே போனது உங்கள் அறம்?
எங்கே இருக்கிறது உங்கள் நியாயம்?

பிகு

பழைய கோவா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேச, பீகார் உதாரணங்கள் கிடக்கட்டும், சமீபத்தில் ஹரியானாவில் ஓம்பிரகாஷ் சௌத்தாலா கட்சியுடன் கூட குதிரை பேரம் நடத்தி ஆட்சி அமைத்த போது கூட இந்த மானஸ்தர்கள் "அறம்" என்று  எந்த   எழவையும் பேசவில்லை என்பதை  நினைவில்  கொள்ளுங்கள். 

No comments:

Post a Comment