ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுத்த தொகையை கட்டுவதற்கு தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் இரண்டாண்டு கால அவகாசம் கொடுத்துள்ளது மத்தியரசு.
அதாவது இன்று கட்ட வேண்டிய தொகையை இரண்டாண்டுகள் கழித்து கட்டிக் கொள்ளலாம். அதுவும் உடனடியாக அல்ல. அடுத்து ஒரு ஐந்து ஆண்டுகளில் சமமாக பிரித்துக் கட்டிக் கொள்ளலாம்.
இந்த முக்கிய முடிவை நேற்று மோடி தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டம் எடுத்துள்ளது.
நிதிப்பற்றாக்குறை காரணமாக பாரத் பெட்ரோலியம், ஷிப்பிங் கார்ப்பரேஷன், கண்டய்ணர் கார்ப்பரேஷன் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது மட்டுமல்லாமல் நிர்வாகப் பொறுப்பையும் கை மாற்றி விடுவது என்றும் அதே கேபினட் கூட்டம் முடிவெடுத்துள்ளது.
ஒரு புறம் நிதிப்பற்றாக்குறை என்று சொல்லி பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பதும் அதே நேரம் அரசுக்கு தனியார் நிறுவனங்கள் அளிக்க வேண்டிய 42,336 கோடி ரூபாய்க்கு கால அவகாசம் அளிப்பதும் (நாளை ரகசியமாக தள்ளுபடி கூட செய்து விடுவார்கள்) எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!
இதை ஊழல் என்று சொல்லாமல் வேறெப்படி அழைப்பது?
அரசுக்கு வர வேண்டிய பணத்திற்கு கால அவகாசம் கொடுக்க அது என்ன மோடி குடும்ப சொத்தா?
இதுக்கு பெயர்தான் மோடி சர்க்கார்.ஊழலற்ற ஆட்சி.
ReplyDeleteI endorse Sri.Joseph's comment😂😂
ReplyDeleteநல்ல கேள்வி
ReplyDelete