Friday, November 15, 2019

சபரிமலை - நீதி தேவர்கள் மயக்கமா?


அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குச் சென்று ஐயப்பனை வழிபடலாம் என்பது கடந்த வருடம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு.

ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, நாரிமன், சந்திரசூட், கான்வாலிகர் ஆகியோர் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்துக்கு முரணானது என்றும் நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டும் நம்பிக்கையே பிரதானம், பெண்கள் செல்லக்கூடாது என்றால் செல்லக் கூடாது என்றும் தீர்ப்பளித்தனர்.

இப்போது மறு ஆய்வுக்கான ஐந்து நீதிபதிகள் அமர்வில் தீபக் மிஸ்ராவிற்கு பதிலாக தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (நீதிமன்ற செயல்பாடுகள் வெளிப்படையாக இல்லை என்று பத்திரிக்கையாளர்களிடம் குறை சொன்ன நால்வரில் ஒருவர்) இருந்திருக்கிறார்.

ரஞ்சன் கோகாய், இந்து மல்கோத்ரா, கான்வாலிகர் ஆகிய மூன்று நீதிபதிகள் இந்த வழக்கை ஏழு பேர் கொண்ட அமர்விற்கு மாற்ற வேண்டும் என்று சொல்ல நாரிமன் மற்றும் சந்திரசூட் ஆகியோர் முந்தைய தீர்ப்பு தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளனர்.

வழக்கிற்கு அப்பாற்பட்ட விஷயங்களை கொண்டு தலைமை நீதிபதி குழப்புகிறார் என்று தீர்ப்பிலேயே வெளிப்படையாக விமர்சித்துள்ளார்கள். தீர்ப்பிற்கு எதிராக செய்யப்பட்ட கலவரங்களையும் கண்டித்துள்ளார்கள். 

கடந்த முறை அளித்த தீர்ப்பிலிருந்து ஒருவர் ஏன் இப்போது தடுமாறினார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். வழக்குக்கு தொடர்பில்லாத அம்சங்களைப் பற்றி தலைமை நீதிபதி ஏன் குழப்பினார் என்பதும் கூட அப்படி ஒரு ரகசியமே!

முந்தைய தீர்ப்பிற்கு எந்த தடையும் பிறப்பிக்கப்படவில்லை.

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்பதுதான் அதன் பொருள்.

ஆனால்

அதற்குள்ளாக

தடை இல்லை என்பதற்காக சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்தால் நடப்பதே வேறு 

என்ற மிரட்டலை விடுத்திருப்பது

காங்கிரஸ் கட்சியின் ரமேஷ் சென்னித்தலா.

எந்த காலத்திலும் அக்கட்சி உருப்படப் போவதில்லை...

No comments:

Post a Comment