நேருவிடம்
நமக்கும் சில முரண்பாடுகள் உண்டு. ஆனாலும்
இந்தியாவின் முக்கியமான பிரதமர் அவர், பாராட்டப்பட வேண்டிய தலைவர் என்பதில் மாற்றுக்கருத்து
கிடையாது.
சங்கிகள்
அவரை ஏன் வெறுக்கிறார்கள்?
ஏனென்றால்
அவர்களுக்கு, குறிப்பாக மோடிக்கு
நேருவின்
அறிவாற்றல் கிடையாது.
நேருவின்
தொலைநோக்குப் பார்வை கிடையாது.
நேருவின்
பன்முகத்தன்மை கிடையாது.
நேருவின்
ஆளுமைத் திறன் கிடையாது.
நேருவைப்
போன்ற தியாக வரலாறு கிடையாது.
நேருவைப்
போல சிறைவாசம் தேசத்திற்காக அனுபவித்தது கிடையாது.
நேருவைப் போன்ற வாசிப்பு கிடையாது.
நேருவைப் போல எழுத்தாற்றலோ, சுயமான பேச்சாற்றலோ கிடையாது.
நேரு உருவாக்கியது போல எல்.ஐ.சி, பி.ஹெச்.இ.எல், ஐ.எஸ்.ஆர்.ஓ போன்ற சாதனை நிறுவனங்கள் எதையும் அவர்களால் உருவாக்க முடியவில்லை.
நேருவின்
மதச்சார்பின்மைக் கொள்கையோ அவர்களுக்கு எட்டிக்காயாய் கசக்கும். இந்தியாவை இன்னமும்
அவர்கள் நினைத்தது போல மாற்ற முடியாததற்கு நேரு அமைத்த அடித்தளம் ஒரு காரணம் என்பதுதான்
அவர்களுக்கு எரிச்சலாக இருக்கிறது.
என்ன
குட்டிக்கரணம் அடித்தாலும் மோடியால் என்றைக்கும் நேருவின் அருகில் அல்ல, நேருவின் நிழல்
அருகே கூட நெருங்க முடியாது.
அதனால்தான்
நேருவை இழிவு படுத்து தங்கள் அரிப்பை தீர்த்துக் கொள்கிறார்கள்.
சங்கிகள்
யாரையாவது இழிவு படுத்தினால் நாம் கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம்.
அவர்
ஒரு சிறந்த மனிதர் என்று . . .
No comments:
Post a Comment