ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்ற வாலிபர் திங்கட்கிழமையன்று பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.
துருக்கியில் உள்ள தனது காதலியை சந்திக்க பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வழியாக துருக்கி செய்யப் பயணப்பட்ட போது தான் பாகிஸ்தானில் கைதானதாக அவர் சொன்னதாக சொல்லப்படுகிறது. அவரிடம் பாஸ்போர்ட்டோ அல்லது வேறு ஆவணங்களோ எதுவும் இல்லை.
2017 ஏப்ரல் முதலே அவர் காணவில்லை என்று அவருடைய பெற்றோர் சொல்லி உள்ளார்கள்.
இரண்டரை வருடங்களாக அவர் எங்கே இருந்தார்?
நடந்து போவதாக இருந்தால் கூட இத்தனை நாட்களில் இரண்டு முறை துருக்கி போய் விட்டு வந்திருக்கலாமே?
பாஸ்போர்ட், விசாவோடு நேரடியாக துருக்கிக்கு போக முடியும் என்பது ஒரு மென்பொருள் பொறியாளருக்கு தெரியாதா?
இதில் என்னமோ மர்மம் இருக்கிறது.
அதை மறைக்க காதல் என்ற சாயம் பூசப்படுகிறதோ?
பிரசாந்திற்கும் அவரை பாகிஸ்தானுக்கு அனுப்பியவர்களுக்கும் மட்டுமே வெளிச்சம்!
பாஸ்போர்ட் விசா எதுவுமே இல்லாமல் பாகிஸ்தானுக்குள் அவர் எப்படி நுழைந்தார்?
ReplyDeleteஉளவு பார்க்க அனுப்பினார்களோ என்பதுதான் என் சந்தேகம்
Delete