Thursday, November 14, 2019

இனியொரு ஃபாத்திமா இறக்கக்கூடாது . . .

சென்னை ஐ.ஐ.டி யில்ஃபாத்திமா லத்தீஃப் என்ற பெண் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அப்பட்டமான இஸ்லாமிய வெறுப்பில் அப்பெண்ணை தற்கொலைக்குத் தூண்டிய சுதர்சன் பத்மநாபன் என்ற பொறுக்கிப் பேராசியர் கைது செய்யப்பட வேண்டும்.

இப்படிப்பட்டப் போக்கு சமீப காலங்களில் அதிகரிக்க என்ன காரணம் என்று ஆராய வேண்டும்.

வெறுப்புணர்வையும் பகைமையையும் வளர்த்தெடுப்பதே இன்றைய ஆட்சியாளர்களின் தலையாய பணியாக இருக்கும் போது உச்ச நீதிமன்றம் உட்பட அனைத்து அதிகார மையங்களும் அதற்கு ஏற்றார் போல இசைந்தாடுகிற போது சுதர்சன் பத்மநாபன் போன்றவர்களின் ஆட்டம் அதிகமாகத்தான் இருக்கும்.




ஐஐடி மெட்ராஸில் இஸ்லாமிய வெறுப்பினால் நிறுவன படுகொலை செய்யப்பட்ட ஃபாத்திமா லத்தீஃப் தாயார் ஊடகங்களிடம் பேசிய மலையாள பேட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பு.

"எங்களுக்கு பெண் பிள்ளையை கல்விக்கூடத்திற்கு வெளியூருக்கு அனுப்புவதற்கு பயமாக இருந்தது. நாட்டில் நிலவிவரும் மதவெறுப்பின் காரணமாக எனது மகளை முக்காடு(சால்)அணிவதற்கு கூட வேண்டாமென மறுத்துவிட்டோம். எங்கே முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவள் தொல்லைகளுக்கு உட்படுவாளோ என நாங்கள் அஞ்சினோம். நாங்கள் என்ன செய்ய பெயர் ஃபாத்திமா லத்தீஃப் ஆகிவிட்டதே. எல்லா பிள்ளைகளைப் போல சாதாரணமாக உடை அணிந்துகொள் என்று வலியுறுத்தினோம். ஏனெனில் நாட்டில் நிலவும் சூழல் அப்படிப்பட்டது.

முதலில் அவளுக்கு பனாரஸில் மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்தது. ஆனால் வட மாநிலங்களில் நிலவும் கும்பல் படுகொலையை நினைத்து நாங்கள் அஞ்சினோம். வேண்டாம் மகளே என நான் மறுத்தேன். அம்மா நான் விமானத்தில் அல்லவா போகப் போகிறேன் ஏன் கவலை என்றாள். வேண்டாம் மகளே.., விமானத்தில் போனாலும் சாலையிலும் நாம் நடக்க வேண்டியிருக்கும். சாலைகளில் சர்வசாதரணமாக கும்பல் படுகொலை(Mob Lynching) நடக்கும் தேசமிது வேண்டாம் மகளே என நான் பலவந்தமாக மறுத்தேன். அதன்பின் தான் மெட்ராஸ் ஐஐடி யில் படிக்க அனுப்பினோம்.

ஐஐடி யில் என் மகளுக்கு தொல்லைகள் தரப்பட்டிருக்கிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இன்டெர்னல் மதிப்பெண்ணை குறித்து பேராசிரியரிடத்தில் எனது மகள் விவாவதம் செய்தது அவருக்கு பிடிக்கவில்லை. நவீன கால பிள்ளைகளைப் போன்று நண்பர்களோடு ஊர் சுற்றுவது போன்ற எந்த செயலிலும் எனது மகள் பங்கெடுத்தது இல்லை. படிப்பில் நல்ல ஆர்வத்தோடு இருந்தவள். வேண்டுமெனில் ஐஐடி வளாகத்தில் விசாரித்து கொள்ளலாம். எனது மகளுக்கு தெரிந்த விடயமெல்லாம் வகுப்பறை, விடுதி, நூலகம், மற்றும் உணவகம் மட்டும்தான். இதைத்தவிர வேறெங்கும் அவள் சென்றதில்லை.

பேராசியர் சுதர்சன் பத்மநாபனின் தொல்லைகள் தாங்காமல் தான் அவள் இறந்துபோயிருக்கிறாள். அவளுக்கு முஸ்லிம் நண்பர்களும் ஐஐடி யில் குறைவானவர்களே. இந்தியாவின் சூழல் மாறிவருகிற காரணத்தினால் தமிழ்நாடெனில் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பித்தான் நாங்கள் ஐஐடி மெட்ராஸில் படிக்க அனுப்பினோம்.

சுதர்சன் பத்மனாபன்தான் எனது மகளை இல்லாமல் ஆக்கியது. முதலமைச்சரை சந்தித்தோம். இனியொரு ஃபாத்திமா சாகமாட்டாள் அதற்கான எல்லா நடவடிக்கைகளும் தாங்கள் எடுப்பதாக அவர் உத்தரவாதம் அளித்தார்.


அடுத்த செமஸ்டருக்கு படிப்பதற்கான புத்தகங்களை இப்பொழுது ஆன்லைனில் ஆர்டர் செய்து எனக்கு தகவல் தந்தாள். மூன்றாவது செமஸ்டரில் இருக்கும் இருக்கும் பொருளாதார கணிதம் கொஞ்சம் கடினமானது எனவே நான் இப்பொழுதிருந்தே டியூசன் செல்ல வேண்டுமென திட்டமிடும் ஒரு பெண் பிள்ளை இப்படி சாவதற்கு விருப்பபடுமா..?

சுடிதார் பேண்டின் கயிறினை கட்டத்தெரியாத பெண் எனது மகள். காரணம் அது அவளை இறுக்கி வலியை உண்டாக்கும் எனச்சொல்வாள். 18வயதான பின்னும் அவளுக்கு அதனை இறுக்கமாக கட்டத்தெரியாத காரணத்தால் அவளுக்கு லெங்கின்சும், ஜீன்சும் வாங்கி கொடுத்தோம். அவள் தூக்குக் கயிறை நெரிப்பதை எப்படி எதிர்கொண்டாள் என்று தெரியவில்லையே..? அவளா இப்படி செய்து கொண்டாள்..?

ஐஐடியில் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு தொல்லைகள் தரப்படுகின்றன. கடந்து வருடம் 5நபர்கள் தொல்லை தாங்காமல் விலகி சென்றுவிட்டனர். நாங்கள் உயர் நீதிமன்றமானாலும், உச்சநீதிமன்றமானாலும் சென்று என் மகளுக்கு நீதியை பெற்றே தீருவோம். இல்லையேல் நாங்கள் வாழ்வதற்கு அர்த்தமே இல்லை.

இனியொரு ஃபாத்திமாவை நாங்கள் இழக்க தயாரில்லை..

3 comments:

  1. இவ்வாறான இழப்பு
    இனி வேண்டாம்

    ReplyDelete
  2. பெண் என்பவள் என்ன இனமாக இருந்தாலும் இவ்வாறான தொல்லைகளுக்கு உட்படுகின்றன என்று நினைக்கும்போது மனம் வேதனை தருகின்றது என்ன காரணத்தினால் இவ்வாறு நடந்திருக்கின்றது என்பதை தீர விசாரித்து அதற்கான தண்டனையை வழங்க வேண்டியது மிக முக்கியம்

    ReplyDelete
  3. பெண் என்பவள் என்ன இனமாக இருந்தாலும் இவ்வாறான தொல்லைகளுக்கு உட்படுகின்றன என்று நினைக்கும்போது மனம் வேதனை தருகின்றது என்ன காரணத்தினால் இவ்வாறு நடந்திருக்கின்றது என்பதை தீர விசாரித்து அதற்கான தண்டனையை வழங்க வேண்டியது மிக முக்கியம்

    ReplyDelete