மாசுப்
பிரச்சினையால் புது டெல்லி மக்கள் சொல்ல முடியா சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்.
இது
பற்றி விவாதிக்க கடந்த வெள்ளிக்கிழமையன்று சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு கூட்டத்தை ஏற்பாடு
செய்துள்ளது. புது டெல்லி அரசு, புது டெல்லியைச் சேர்ந்த எம்.பி க்கள் ஆகியோர் கலந்து
கொள்ள வேண்டும்.
முன்னாள்
கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ஒரு பாஜக எம்.பி. அவரும் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை.
முக்கியமான
பிரச்சினை குறித்த கூட்டத்தில் கூட கலந்து கொள்ள முடியாமல் அப்படி என்ன தலை போகிற வேலையைச்
செய்து கொண்டிருந்தார்?
அவருடைய
சக முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் அந்த ரகசியத்தை ட்விட்டரில் போட்டோவுடன் போட்டு உடைத்து விட்டார்.
“இந்தூரில்
நாங்கள் சூடான ஜிலேபியை ருசித்துக் கொண்டிருக்கிறோம்”
ஏதோ
கிரிக்கெட் பந்தயத்திற்கு தொலைக்காட்சி வர்ணனை கொடுக்க போய்விட்டார் நாடாளுமன்ற உறுப்பினர்
கவுதம் கம்பீர்.
தொலைக்காட்சியில்
வர்ணனை செய்தால் துட்டு கிடைக்கும். மாசுப்பிரச்சினை தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டால் என்ன கிடைக்கும். அந்த கூட்டத்தில் கூட ஜிலேபி,
சமோசா எல்லாம் கூட கிடைக்கலாம். ஆனால் வர்ணனை செய்வதற்கு கிடைக்கும் துட்டு கிடைக்குமா?
பிரச்சாரத்தின்
போதே தன்னைப் போல தோற்றமளித்தவரை திறந்த ஜீப்பில் நிற்க வைத்து தான் ஓய்வெடுத்துக்
கொண்ட சொகுசுப் பேர்வழிக்கு ஓட்டு போட்டது தவறு என்று இனியாவது அத்தொகுதி மக்கள் உணரட்டும்.
No comments:
Post a Comment