நீங்களும்
ரஜனிகாந்தும் சேர்ந்து கூட்டணி அமைக்கப் போறீங்க போல இருக்கு. யார் முதல்வர் வேட்பாளர்
என்பதை அப்பாலிக்கா முடிவு செய்யலாம்னு (இன்னும் ஆரம்பிக்கப்படாத, ஆரம்பமாகுமே என்றே
தெரியாத) உங்கள் கூட்டணிக்கட்சித் தலைவர் ரஜனிகாந்த் சொல்லி இருக்காரு.
ஆனாலும்
நீங்க அவருகிட்ட ஜாக்கிரதையா இருக்கனும். அவரோட முதல் படத்தில இருந்தே அவர் உங்களுக்கு வில்லன்தான்.
ஞாபகம்
இருக்கா?
அபூர்வ
ராகங்கள் பைரவி, மூன்று முடிச்சு செல்வி, 16 வயதினிலே மயிலு ஆகியோர் உங்களுக்கு கிடைக்காம
போனதுக்கு யார் காரணம்?
அதிலயும்
நீங்க தண்ணியில விழுந்து தடுமாறும் போது முகத்தை கொடூரமா வச்சிக்கிட்டு, எம்.எஸ்.வி வாய்ஸ்ல பாடிக்கிட்டு துடுப்பு போட்டு நீங்க மூழ்கிப்போனதை வேடிக்கை பார்த்தது
யாரு?
ஏதோ
மூணு சதவிகித வோட்டு வாங்கினீங்க. அந்த மூணு பேரை பறி கொடுத்தது மாதிரி, இவரோடு சேர்ந்து
அந்த மூணு சதவிகிதத்தையும் இழந்திடாதீங்க . . .
பிகு
இதை
நகைச்சுவைப் பதிவாக கருதுபவர்கள் நகைச்சுவையாகவும்
அரசியல்
பதிவாக கருதுபவர்கள் அரசியாலாகவேவும்
எடுத்துக்
கொள்ளலாம்.
தமிழக மக்கள் நடிகர்களை விரும்பவில்லை.
ReplyDeleteபல நடிகர்கள் தோல்வி கண்டனரே!
அரசியலைப் பொறுத்தவரை இருவருமே கோமாளிகள் தான். இவர்கள் இணைவதால் நமக்கு பாதிப்பு எதுவும் ஏற்பட போவதில்லை.
ReplyDelete