Wednesday, November 27, 2019

மாலன் ஒரு விஷ ஜந்து



பொதுவாக தமிழ்த்திரைப்படங்களின் வில்லன் எல்லாம் தோற்றத்திலோ அல்லது நடிப்பிலோ கொடூரத்தை வெளிப்படுத்துபவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

பி.எஸ்.வீரப்பா, நம்பியார், அசோகன், மனோகர் போன்ற ஆதி கால வில்லன்களாக இருந்தாலும் சரி

ரஜனிகாந்த், சத்யராஜ், ரகுவரன், நாசர் போன்ற பிந்தைய கால வில்லன்களுக்கும்

இந்த இலக்கணம் பொருந்தும்.

இந்த இலக்கணத்திற்கு மாறான ஒரு வில்லனை கமலஹாசன் நடித்த "சத்யா" படத்தில்தான் முதல் முறை பார்க்க முடிந்தது.

மென்மையான தோற்றத்தோடு கனவான் போல காட்சியளித்த வில்லன் கிட்டி. கமலஹாசனிடம் காரியம் முடிந்த பிறகுதான் உண்மையான நிறம் தெரியும். அப்போதும் கூட அந்த மென்மை மாறவேயில்லை.

அது போன்றதொரு வில்லன்தான் விஷ ஜந்து மாலன்.

மோடி ஆட்சிக்கு வந்த பின்பு மென்மையான கனவான் முகத்திரை கழண்டு போன  விஷ ஜந்துக்களில் முக்கியமான ஜந்து மாலன். 

ஆம்

மனிதன் என்று அழைப்பதற்கான எந்த யோக்கியதாம்சங்களும் இல்லாததால் ஜந்து என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

சங்கி என்று தன்னை வெளிப்படையாக அறிவித்துக் கொள்ளும் குறைந்தபட்ச நேர்மை கூட இல்லாமல் நடுநிலை நாடகம் போடுவதுதான் அந்த ஜந்துவின் வாடிக்கை. 

மகாராஷ்டிராவில் அஜித் பவார் மூலம் குதிரை பேரம் நடத்திய போது சங்கிகளை ஆதரித்து எழுத முடியாத கையாலாகததனத்தை, ஆனால் மனதிற்குள் ஏற்பட்ட குதூகலத்தையும் மறைக்க முடியாமல் அந்த ஜந்து சரத் பவார் தன்  முன் வினைப்பயனை இப்போது அனுபவிக்கிறார் என்று எழுதி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டது. 

அத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை அந்த ஜந்து.

பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டதும் அப்படியே  பதறி விட்டது. 

ஆளுனரின் உரிமையில் தலையிட நீதிமன்றத்திற்கு உரிமை உண்டா என்று எழுதி தான் ஒரு அக்மார்க் சங்கி என்று நிரூபித்து அடுத்த பேமெண்டுகளை உறுதிப்படுத்திக் கொண்டு விட்டது. 

நீதிமன்ற ஆணை அமித் ஷாவின் அற்புதம் தொடர அனுமதிக்காது என்பதால்தான் அதற்கு அந்த பதற்றம்.

நடுநிலை வேடத்தைக் கலந்து தான் ஒரு சங்கி என்பதை வெளிப்படையாகக் கூறும் வரை இந்த ஜந்துவிற்கு  துடைப்ப அடி தொடர்ந்து கொண்டே இருக்கும் . . . 


4 comments:

  1. இதை படிச்சா அந்த ஜந்து தூக்கு மாட்டிக்கிட்டு செத்துடும்

    ReplyDelete
  2. ஆளுநரின் தவறை மறைக்க வஞ்சகமான வாதத்தை முன் வைத்த விஷம்

    ReplyDelete
  3. சிறந்த கண்ணோட்டம்

    ReplyDelete
  4. உண்மையிலேயே மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பலருடைய முகமூடிகள் கழன்று விட்டன. மாலன் போல் நமக்கு மிகப் பிடித்தமான பலர் அந்தப் பட்டியலில் இருந்தது அதிர்ச்சி மட்டுமில்லை, வேதனையும் கூட. நல்ல தமிழ்ப் பற்றாளராக அறியப்பட்ட கிழக்கு பதிப்பக பத்திரி சேசாத்திரியும் இந்தப் பட்டியலில் உண்டு என்பது அண்மைய அதிர்ச்சி.

    ReplyDelete