Friday, September 8, 2017

சத்தமின்றி கை தட்டவா யுவர் ஆனர்?




Clap without making sound

இப்படி ஒரு விளையாடு ஆசிரியர் சொன்னதாக் ஒரு நகைச்சுவை நான் மாணவனாக இருந்த காலத்தில் உலாவியுள்ளது.

இன்று அதே காமெடியை உச்ச நீதிமன்றமும் சொல்லியுள்ளது.

அதெப்படி அமைதியாக போராட்டம்?

குரலெழுப்பாமல்  இரங்கல் ஊர்வலம் போல மௌனமாய் போனாலும்  அதுவும் எங்களுக்கு பாதிப்பு  என்று ஒரு கூட்டம்  கிளம்பத்தான் செய்யும்.
ஹரியானா போல கலவரம் எதுவுமின்றி நடக்கும் போராட்டத்தில் அமைதிக்கு என்ன பங்கமென்று சொல்வீரா நீதிமான்களே?

"நீட்" டிற்கு அப்படி என்ன புனிதம் இருக்கிறது? அதற்கு எதிராக போராடினால் உங்களுக்கு ஏன் இப்படி பதறுகிறது?
"வேலை நிறுத்தம்" எனக்கு பிடிக்காத வார்த்தை என்று எந்த புரிதலும் இல்லாத ஒரு தனி நபர் சொல்லலாம்.
அனைத்தும் கற்றறிந்த நீதிபதிகள் போராட்டத்திற்கு எதிராக பேசலாமா? 
போராட்டம் இல்லாவிட்டால்
இந்தியாவிற்கு சுதந்திரம் ஏது?
அரசியல் சாசனம் ஏது?
நீதிமன்றங்கள் ஏது?
நீதிபதிகள் ஏது?
மக்களின் மன அமைதியை ஆட்சியாளர்கள் குலைக்கிற போது போராட்டம் தவிர வேறு வழிதான் ஏது?
ஆட்சியாளர்கள் ஒழுங்காய் இருந்தால் போராட்டத்திற்குத்தான் தேவை ஏது?
அதை முதலில் கவனியுங்கள் யுவர் ஆனர்.
அப்படிச் செய்தால் நாங்கள் கை தட்டுகிறோம், சத்தமில்லாமலேயே

5 comments:

  1. மக்களின் மன அமைதியை ஆட்சியாளர்கள் குலைக்கிற போது போராட்டம் தவிர வேறு வழிதான் ஏது?*** pose this question to comrades' chinese master. Remember tinanmen square?

    ReplyDelete
    Replies
    1. Mr Old Man, Tell something new?
      No update in your saffron washed brain?

      Delete
  2. ஆட்சியாளர்கள் ஒழுங்காய் இருந்தால் போராட்டத்திற்குத்தான் தேவை ஏது?*** ஒழுங்கை கடைப்பிடிக்கவேண்டியது சிவப்பு ரத்த தாகம் கொண்ட தகர டப்பா கூட்டம். சீனாவுக்கு அடிமையாகி இந்தியாவின் முன்னேற்றத்தை முடக்கும் கூற்றம். அப்பாவி மாணவர்கள் அறவழியில் போராடிய போது டினான்மன் சதுக்கத்தில் நடந்த அவர்களின் படுகொலை பயங்கரம் ஞாபகம் இருக்கா?

    ReplyDelete
    Replies
    1. பெரியவரே, மேஜர் சுந்தரராஜன் மாதிரி
      இங்கிலிஷீல் ஒரு தடவை, தமிழில் ஒரு தடவை சொல்றீங்களே,
      புதுசா சொல்லுங்க சார்

      Delete
  3. பக்கத்து ஊரிலே? பக்கத்து தெருவிலே! ஏன் பக்கத்து வீட்டிலே இழவு விழுந்தாலும், அதை கண்டு கொள்ளாமல் போவது தானே நவீனம்.

    ReplyDelete