தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு நடத்திய மத நல்லிணக்க சிறப்பு மாநாடு பற்றி நேற்று எழுதியிருந்தேன். அதிலே தோழர் ஆளூர் ஷாநவாஸ் பேசிய போது பகிர்ந்து கொண்ட சில தகவல்கள்.
சென்னை மண்ணடி இஸ்லாமியர்கள் நிரம்பிய பகுதி. பக்ரீத் போன்ற திருநாட்களின் போது அவர்கள் ஒன்றாக தொழுகை நடத்த அங்கே உள்ள மசூதிகளில் இடம் போதாது. அவர்களுக்குச் சொந்தமான மைதானமும் கிடையாது. ஆனால் அவர்கள் தொழுகை நடத்த ஒரு மைதானம் கிடைத்தது. புகைப்படத்தில் பார்த்தால் அவர்கள் தொழுகைக்குப் பின்னணியில் ஒரு சிலுவை தெரியும். ஆம் டான் பாஸ்கோ பள்ளி நிர்வாகம் தங்கள் பள்ளி மைதானத்தை தொழுகை நடத்த அனுமதித்தது. இதுதான் மத நல்லிணக்கம்.
வரலாறு முழுதும் இதைக் காணலாம்.
மயிலாப்பூரில் கபாலீஸ்வரருக்கு ஆலயம் கட்டிவிட்டார்கள். கோயில் அருகே தெப்பக்குளம் உருவாக்க ஆசைப்பட்டார்கள். கோயிலுக்கு அருகே உள்ள நிலம் வேறு ஒருவருடையது. அவரிடம் கேட்க தயங்கினார்கள். இருந்தும் கேட்டார்கள். அவர் முழுமனதோடு தெப்பக்குளத்திற்கான இடத்தை எந்த விலையும் பெற்றுக் கொள்ளாமல் வழங்கி விட்டார். இப்போதும் மயிலை தெப்பத்திருவிழாவின் முதல் நாள் முதல் மரியாதை அந்த மனிதரின் பரம்பரைக்குத்தான். நிலமளித்த அந்த நபர் ஆற்காடு நவாப்.
மராட்டிய மன்னர்கள் சிருங்கேரி சங்கர மடத்தின் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி கொள்ளையடித்துப் போக தன்னை பாதுகாக்க வேண்டும் என்று சங்கராச்சாரியார் யாருக்கு கடிதம் எழுதினார் தெரியுமா? திப்புசுல்தானுக்கு. திப்பு சுல்தான் தனது படைகளை அனுப்பி உதவியது மட்டுமல்லாமல் இருநூறு வராகன் தங்கமும் அளித்தார். சங்கராச்சாரியார்கள் இப்போதும் அணிந்து கொள்ளும் கிரீடம் அந்த தங்கம் கொண்டு செய்யப்பட்டதுதான்.
இதுதான் இந்தியாவின் பாரம்பரியம். இந்த வரலாறை நாம் சொல்லாவிட்டால் மற்றவர்கள் பொய்களை பரப்பிக் கொண்டிருப்பார்கள்.
ஆம் உண்மைதான்.
உண்மையான வரலாற்றை நாம் உரக்கச் சொல்லாவிட்டால் ராசாக்களும் சமஸ்கிருத சங்கீதங்களும் அனாமதேய முதியவரும் பொய்யான தகவலைச் சொல்லி விஷத்தை பரப்புவார்கள்.
ஆளூர் ஷா நவாஸ் - promising leadership quality person (good in speech, communicate with others and visionary thoughts). like these people should go to law makers post. but poor india / TN no scope for that....
ReplyDeleteseshan
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஉங்களின் வெறி நன்றாக புரிகிறது.
Deleteஉங்களின் கட்டுக்கதைகள் தகரும் போது
பதற்றம் வருகிறது போல.
ஆழ்ந்த அனுதாபங்கள்
This comment has been removed by a blog administrator.
Deleteமாற்று மதத்தவர்களை அனுமதிக்க மாட்டோம் என்ற போர்டுகளை இந்துக் கோயில்களிலிருந்து அகற்றி விட்டு கேளுங்கள்.
Deleteமத நல்லிணக்கத்திற்கான உதாரணங்களை நான் சொல்கிறேன்.
அதை சீர்குலைக்க வேண்டும் என்ற வெறி உங்களிடம்.
அதுதான் சிவப்பிற்கும் காவிக்கும் உள்ள வித்தியாசம்
This comment has been removed by a blog administrator.
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteகோட்ஸேவுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று ஆர்.எஸ்.எஸ் சொல்வது போல மஹாராஷ்டிரா பேஷ்வாக்களை இந்து மதத்திலிருந்து நீக்கி விட்டீர்களா?
DeleteThis comment has been removed by a blog administrator.
Deleteசிருங்கேரி சங்கர மடத்தை தாக்கி கொள்ளையடித்தவர்கள் இந்துக்கள்தான் என்பதை ஒப்புக் கொண்டதற்கு மகிழ்ச்சி
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஎன் நோக்கம் மத நல்லிணக்கத்தை பலப்படுத்துவது.
ReplyDeleteஉன் நோக்கம் மத வெறியை தூண்டுவது.
அதற்கு இந்த வலைப்பக்கத்தில் இடமில்லை.
ஒன்று மட்டும் சொல்கிறேன்.
உங்களைப் போன்ற வெறியர்கள்தான் இந்தியாவின் துயரம்.
உங்களின் அழிவில்தான் இந்தியாவில் அமைதி பிறக்கும்