Saturday, September 2, 2017

ஒரே ஒரு கேள்வி ஆசானே?





ஜெமோவின் எழவெடுத்த பக்கம் வழக்கமாக செல்ல மாட்டேன். மாணவி அனிதாவின் மரணம் குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி போல இந்த மனிதனும் ஏதாவது பிதற்றியுள்ளாரா என்று பார்க்கச் சென்றேன். இன்னும் ஆசான் அது பற்றி எழுதவில்லை. ஆனால் கீழடி பற்றி பத்து பக்கங்களுக்கு மிகாமல் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.கிட்டத்தட்ட நிர்மலா சீத்தாராமனின் குரல் அது.

கீழடிப் பிரச்சினையை கையிலெடுத்துள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்திற்கு 

தமிழ் ஃபாசிஸ்டுகள்,
அசடுகள்
அரை வேக்காடுகள்

என்றெல்லாம் முத்திரை குத்தியுள்ளார்.

தமுஎகச தோழர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

கீழடி பற்றி யார் பேச வேண்டும் என்று அறிவுரை கொடுத்துள்ளார்.
அதைப் படியுங்கள்.

கீழடியைக் குறித்தவரை இவ்விவாதம் உருவாவதற்கு இன்னும் நெடுங்காலம் ஆகும். அங்கு இன்னும் ஆய்வே முறையாகத் தொடங்கப்படவில்லை. கிடைக்கும் பொருட்களைக் கொண்டு ஆய்வாளர்கள் ஒருவிவாதத்தை தங்களுக்குள் இப்போதுதான் தொடங்கியிருக்கிறார்கள். அதற்குள்ளாகவே இங்கே மேடைப்பேச்சாளர்களும் சினிமாக்காரர்களும் அரசியல்வாதிகளும்அதாவது தொல்லியலாளர்கள் வரலாற்றாய்வாளர்கள் தவிர்த்த அத்தனைபேரும்எப்படி ஆய்வு செய்ய வேண்டும் என்னென்ன முடிவுகளுக்கு வரவேண்டும் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

மேலே ஆசான் சொன்ன அடிப்படையில் அவருக்கு ஒரே ஒரு கேள்வி.

அந்தந்தத்துறை சம்பந்தப்பட்ட பிரச்சினையில் வேறு யாரும் பேசக் கூடாது என்றால் செல்லா நோட்டு விவகாரத்தில் மோடிக்கு முட்டு கொடுத்து வரிந்து வரிந்து எழுதினீர்களே, நீங்கள் என்ன பொருளாதார நிபுணரா? இல்லை அல்லவா?

பின்னே என்ன எழவிற்கு அதைப் பற்றி எழுதினீர்கள்?
 

7 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. ஜெய மோகனை அபத்தமா எழுதறதை நிறுத்தச் சொல்லு
    அந்தாளைச் சொன்னா உனக்கு ஏண்டா நோகுது?

    ReplyDelete
  3. யார் தான் யோக்கியன் ?
    கம்யூனிஸ்ட் யோக்கியனா ?
    கம்யூனிஸ்ட் தா பாண்டியன் ஜெயலலிதா காலை நக்கிட்டு இருக்கலியா ?
    கம்யூனிஸ்ட் தலைவர் தளி டி.ராமச்சந்திரன் செய்யாத கிரானைட் கொள்ளையா? அதை எந்த கம்யூனிஸ்ட் தலைவராவது தட்டி கேடிட்ருக்காங்களா ?
    நல்லகண்ணு நேர்மையான தலைவர் என்று சொல்லுறீங்க ..ஆனால் இது வரை டி.ராமச்சந்திரன் எதிராக வாயை திறக்கவேயில்லை
    சொந்த கட் சி காரன் என்ன கொள்ளை அடிச்சாலும் பொத்திகிட்டு இருப்பவர் நேர்மையானவரா ?
    /
    இதுக்கு நேர்மையான பதில் வருமா ?

    ReplyDelete
    Replies
    1. ஜெமோ யோக்கியன் இல்லை என்று ஒப்புக் கொண்டதற்கு முதலில் நன்றி.

      கம்யூனிஸ்டுகளை விமர்சிக்க வேண்டுமென்றால் தாபா, தளி ராமச்சந்திரன்
      ஆகியோரைத் தவிர வேறு யாரையும் சொல்ல முடியவில்லை என்பதே
      கம்யூனிஸ்டுகளின் பலம்.

      தாபா பற்றி மிகக் கடுமையான பதிவுகள் இந்த வலைப்பக்கத்தில் நிறையவே
      உண்டு. தேடிப் படிக்கவும்.

      எனக்கு இரண்டு கேள்விகள்

      ஜெமோ கால்களை நீங்கள் நக்கிக் கொண்டிருப்பதால்தான் இந்த பின்னூட்டமா?
      நான் நேர்மையாக பதில் அளித்து விட்டேன். உங்களால் நேர்மையாக நீங்கள்
      யார் என்று கூற முடியுமா?

      Delete
    2. தமிழ் நாட்டில் இருப்பதோ 5 கம்யூனிஸ்ட் தலைவர்கள் அதில் பெருந்தலைவர் பாண்டி பிராடு
      சின்ன தலைவர் ராமசந்திரன் பெரும் பிராடு
      அதைவிட கவுரவ பெரும் தலைவர் நல்ல கண்ணு .. பிராடுவுக்கு உடந்தை
      நான் ஜெமோவின் அரசியல் நிலைப்பாட்டுக்கு பெரும்பாலும் எதிர் நிலைப்பாடு உடையவன்
      ஆனால் அவரின் எழுத்து ஆளுமையை என்றும் மதிப்பவன்

      ராஜேந்திரா

      Delete
    3. திரு ராஜேந்திரா அவர்களே,

      கண்களை கொஞ்சம் அகலமாகத் திறந்து பாருங்கள்.
      தியாகத்தீயில் புடம் போடப்பட்ட எண்ணற்ற மார்க்சிஸ்ட் கட்சியின்
      தலைவர்கள் தெரிவார்கள்.

      ஜெமோவின் எழுத்து ஆளுமை எதற்கு பயன்படுகிறது என்பதுதான் பிரச்சினையே

      Delete
  4. குண்டு சட்டி குதிரைகள்...

    ReplyDelete