Monday, December 7, 2015

இத்தனை அருவிகள் இருந்து என்ன பயன்?



சென்னை வெள்ளம் காரணமாக கேரளப் பயணம் பற்றி எழுதுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக பகிர்ந்து கொள்கிறேன்.

கேரளாவில் பல நீர்வீழ்ச்சிகளைப் பார்த்தோம்.

அவற்றின் எழில் கொஞ்சும் புகைப்படங்கள் கீழே.









இத்தனை அருவிகளுக்கு சென்றால் என்ன? ஆக்ரோஷத்தோடு அவை சீறிப் பாய்ந்தால்தான் என்ன?

இவற்றை வெறுமனே வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடிந்ததே தவிர, ஒரு அருவியிலும் கூட குளிக்க முடியவில்லை. அதிரப்பள்ளி அருவியை தூரத்தில் இருந்து பார்க்க முடியுமே தவிர, கிட்டவே நெருங்க முடியாது என்கிற போது எங்கிருப்பது குளிப்பது?

அதே போல்தான் மற்ற அருவிகளும். எதிலுமே குளிப்பதற்கான வாய்ப்பு கிடையாது.

ஆறு அருவிகளைப் பார்த்தும் அருவிக்குளியல் என்ற சுகானுபவம் எங்குமே கிடைக்கவில்லை.

அடுத்த வருடம் குற்றாலம் போக வேண்டியதுதான்.




4 comments:

  1. குற்றாலம் அருவியில் குளிப்பதைப்போன்ற தண்டனை வேறு எதுவும் இல்லை.

    ReplyDelete
  2. குளிக்க இயலா அருவிகள்
    குற்றாலத்துக்கு புறப்படுங்கள் நண்பரே

    ReplyDelete
  3. why communist govt in kerala did not do anything so that a commoner like you can take bath.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் அறியாமையை நினைத்து வருந்துகிறேன். அந்த அருவிகள் குளிக்க முடியாதது இயற்கையின் அமைப்பு என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாமல் கம்யூனிஸ்டுகளை சாடுகிறீர்கள்

      Delete