பீஹாரில் மட்டுமல்ல, பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலேயே
பாஜகவின் பின்னடைவு தொடங்கி விட்டது. அங்கே நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆறு
மாநகராட்சிகளையும் அக்கட்சி தக்க வைத்துக் கொண்டாலும் ஐந்தாண்டுகளுக்கு முன்பு
பெற்ற 443 வார்டுகள் இப்போது 332 ஆக குறைந்து விட்டது. 51 நகராட்சிகள் நாற்பத்தி ஒன்றாகி விட்டது. 22 மாவட்ட பஞ்சாயத்துக்களில் கடந்த முறை பெற்ற வெற்றி இப்போது வெறும் ஏழாக
குறைந்து விட்டது. மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளும் 547 லிருந்து 348
ஆக குறைந்து விட்டது. கடந்த முறை மொத்தமுள்ள
ஒன்றிய பஞ்சாயத்து வார்டுகளின் எண்ணிக்கை 4048 ஆக இருந்த போது 2460
இடங்களை வெற்றி பெற்ற அக்கட்சி இப்போது
வார்டுகளின் எண்ணிக்கை 4778 ஆக உயர்ந்தாலும் 1929 இடங்களையே பெற்றுள்ளது. 230 ஒன்றியங்களில் 77
ஐ மட்டுமே பெற முடிந்திருக்கிறது.
கடந்த மக்களவைத் தேர்தல்களில் குஜராத்தில் உள்ள 26 இடங்களையும் பாஜக வென்றது என்பதோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் சரிவை
நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். நகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப்புறங்களில்
அதன் சரிவு அதிகமாகவே இருக்கிறது.
பாஜக வின் பின்னடைவு காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்தது என்பதும் ஒரு
நெருடலான செய்திதான்.
but you should know that communist can never come. They cannot even play second fiddle to anybody. If communist are so good then why in west Bengal even after 30 yrs people are still poor and that people have to survive either on hooliganism. The rule of law has been destroyed. probably Manik Sircar is an exception and may not fir into a communist role.
ReplyDeleteகம்யூனிஸ்ட் ஆட்சியைப் பற்றி விமர்சிக்கும் அருகதை கீழ்த்தரமான உத்திகளையும் வெறியேற்றும் வன்முறைப் பேர்வழிகளுக்கான காவிகளுக்கு கிடையாது
Delete