வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் இதரப் பகுதிகளில் எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் தொடர்ந்து பல நிவாரணப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
ஊழியர்கள் மனமுவந்து அளித்த பல லட்சம் ரூபாய் கொண்டு பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணி சென்னையிலும் கடலூரிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதற்கிடையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணி மேற்கொள்வது என்று எங்கள் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு முடிவெடுத்தது. சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் இதரக் கோட்டங்களிலிருந்தும் தொண்டர்கள் வருமாறு விடுத்த அறைகூவலை ஏற்று நேற்றும் இன்றும் இருநூறு தோழர்கள் தூய்மைப் பணியில் ஏடுபட்டனர்.
நேற்று தரமணியை அடுத்த கல்லுக்குட்டை என்ற பகுதியிலும் இன்று எம்.ஜி.ஆர் நகர் பகுதியிலும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி இதனை தொடங்கி வைத்தார்.
அலுவலகத்தில் பேனாவும் மௌஸும் பிடித்து பணியாற்றும் தோழர்கள், நேற்று மண்வெட்டி, கடப்பாறை, துடைப்பம் பிடித்து களப்பணி ஆற்றியது உண்மையிலேயே சிலிர்க்க வைத்தது.
எங்களது கோட்டத்திலிருந்து பதினெட்டு தோழர்கள் இந்த தூய்மைப் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். என்ன, எனக்கு மட்டும் ஒரே உறுத்தல்! என் காலின் பலவீனம், எங்கள் கோட்டத் தோழர்களுக்கு நன்றாக தெரியும் என்பதால் என்னை வேலை செய்யவே அனுமதிக்கவில்லை. பாசக்கார தோழர்கள்!
புகைப்படத்திற்காக யாரும் பணியாற்றவில்லை. ஆனாலும் ஆவணம் என்ற முறையில் எடுக்கப்பட்ட சில படங்கள் உங்கள் பார்வைக்காக
எங்கள் வேலூர் கோட்டத்தின் பாசக்காரத் தோழர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் கீழே
பாராட்டிற்குஉரியவர்கள்
ReplyDeleteபாராட்டுவோம்
பாராட்டுக்கள்
ReplyDeleteCongratulations. This is wonderful
ReplyDeleteசீதாராம் யெச்சூரி கலந்துகொண்டார்... மாட மாளிகைகளில் ஒளிந்துகொண்டு அறிக்கை விடவில்லை. நம்ம ஊரு வெட்டி அரசியல் தலைவர்கள் வெட்கப்படவேண்டும்.
ReplyDelete