Sunday, December 6, 2015

பிரெட் மசாலா சாட் - சொதப்பல்




ஒரு வாரமாகவே காரசாரமான அரசியல் பதிவுகளாகவே போய் விட்டதால் மாறுதலுக்கு நீண்ட நாளுக்குப் பிறகு மீண்டும் ஒரு சமையல் பதிவு.

தள்ளுவண்டிக் கடைகளில் கிடைக்கும் மசாலா பூரி போல பிரெட் வைத்து முயற்சித்தது.

வாணலியில் எண்ணைய் வைத்து அது சூடானதும் அதிலே பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கினேன். பிறகு வேர்கடலை சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்தேன். இந்த சந்தர்ப்பத்தில் உப்பும் கரம் மசாலா தூளும் சேர்த்தேன். பிறகு நான்காக  வெட்டிய பிரெட் துண்டங்களையும் போட்டு வதக்கினேன்.

பிறகு  கீழே இறக்கி அதில் கேரளாவிலிருந்து வாங்கி வந்திருந்த நேந்திரங்காய் சிப்ஸையும் உடைத்துப் போட்டு கலந்து ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து கொத்தமல்லி தூவி மகனிடம் அளித்தேன்.

"ய்ப்பா, எவ்வளவு புளிப்பு?" இதுதான் அவன் கமெண்ட்.

அரை மூடி எலுமிச்சை பழம் பிழிந்திருந்தாலே போதுமானதாக இருந்திருக்கும். பிரெட்டிற்கு அவ்வளவு அவசியமில்லை என்பது கற்றுக் கொண்ட பாடம். 

1 comment:

  1. பிரெட் விஷயங்களுக்கு எலுமிச்சை பழ புளிப்பு சுவை பொருத்தமில்லை என்று தான் நம்புகிறேன். செய்முறை இந்த தடவை விபரம் போதாதுங்க. வேர்கடலையை முதலே அவித்து எடுத்து தானே வதக்கினீர்கள்?

    ReplyDelete