கேரளப் பயணத்தில் பார்த்த காட்சி.
மேலே ஒரு கோப்பையைப் பார்த்தீர்களா? வெள்ளியால் செய்யப்பட்ட இந்த கோப்பை கொச்சியில் உள்ள இந்திய கடற்படை மியூசியத்தில் உள்ளது.
யார், யாருக்கு கொடுத்தது தெரியுமா?
இந்திய சுதந்திரத்திற்கு ஒரு மாதத்திற்கு முந்தைய சம்பவம் இது.
பிரிட்டிஷ் கடற்படை, இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக தனது சொத்துக்களை இந்தியா, பாகிஸ்தான் என்று பாகப்பிரிவினை செய்கிறது.
அதையொட்டி வருங்கால இந்திய கப்பற்படை வீரர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி வருங்கால பாகிஸ்தான் கப்பற்படை வீரர்கள் கொடுத்த நல்லெண்ணக் கோப்பை என்று அக்கோப்பையில் பொறிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்திற்கு முன்பு நிலவிய நல்லெண்ணம் இப்போது ஏன் காணாமல் போனது? இரு தரப்பிலும் தவறுகள் செய்தவர்கள் யார்? இப்போதும் பகைக்கனலை அணையாமல் ஊதி விடுபவர்கள் யார்?
அனைவரும் சிந்தித்து விடை காண வேண்டிய கேள்விகள் இவை.
பின் குறிப்பு : ஒரு வரலாற்றுச் சின்னத்தோடு நாமும் இருப்போமோ என்று எடுத்துக் கொண்ட புகைப்படம் கீழே.
Sir ,
ReplyDeletewhat is opinion?
http://srseghar.blogspot.com/2015/12/blog-post_13.html
உண்மையில் ஊடகங்கள் மக்கள் நலக் கூட்டணியின் பணிகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தொழிற்சங்க இயக்கங்கள் ஆகியோரின் பணிகளைத்தான் இருட்டடிப்பு செய்தது. அவர் கணக்கு காண்பித்ததை விட பல மடங்கு அதிகமான தோழர்கள் களத்தில் இருந்தனர். இஸ்லாமிய அமைப்புக்களுக்கு கிடைத்த முக்கியத்துவத்தால் அவர் வயிறெரிந்து போயிருக்கிறார் என்பது புரிந்தது.
Deleteதினமலர் பட்டியல் போட்டு எழுதியதே! அது போதாதா அவருக்கு?
நல்லெண்ணம் இப்போதும் இருக்கிறது
ReplyDeleteஉண்மை நண்பரே, மக்களிடம் உள்ளது. ஆட்சியாளர்களிடம்தான் பிரச்சினை
Delete//அதையொட்டி வருங்கால இந்திய கப்பற்படை வீரர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி வருங்கால பாகிஸ்தான் கப்பற்படை வீரர்கள் கொடுத்த நல்லெண்ணக் கோப்பை என்று அக்கோப்பையில் பொறிக்கப்பட்டுள்ளது. //
ReplyDeleteகுரங்கு பிட்டு பங்கீடு செய்த கதைதான் நினைவுக்கு வருகிறது.