காவிகளின் கயவாளித்தனம் என்றொரு பதிவை சில தினங்கள் முன்பு எழுதியிருந்தேன்.
அமீனா பீவி என்ற பெயரில் காக்கி டவுசர்கள் செய்த மோசடி பற்றியது அந்த பதிவு.
அந்த போலி முகநூல் ஐ.டி செய்தியையே தினமலர் சிலாகித்து எழுதியுள்ளது என்று ஒரு தோழர் தகவல் கொடுத்தார்.
பொய்யான செய்தியை பரப்ப வேண்டாம் என்று தினமலர் பத்திரிக்கையின் இணைய தளத்திற்கு சென்று பின்னூட்டம் இட்டேன். இதற்காக ஒரு யூசர் ஐடி உருவாக்கி அது அளித்த பாஸ்வேர்டை எல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு புகைப்படத்தை வேறு பதிவு செய்து மெனக்கெட்டேன்.
ஆர்.எஸ்/எஸ் புகழ் பாடும் அந்த செய்தியில் அந்த அமைப்பிற்கு புகழாரம் பாடும் பின்னூட்டங்கள் அணி வகுக்க, இது ஒரு போலி செய்தி என்று மறுத்த சில இஸ்லாமியர்களின் கருத்துக்களும் இருந்தது. அதற்கு வழக்கம் போல காவி டவுசர்கள் தங்கள் அநாகரீக பாரம்பரியத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள் மீண்டும் பின்னூட்டம் இட்டேன். அதுவும் இருட்டடிப்பு செய்யப்பட்டது.
ராமன் என்ற பெயருடையவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மோசடியை அம்பலப்படுத்துவது அதற்கு தர்ம சங்கடம் போல.
ஒரு வேளை போலிப் பெயரில் எழுதியிருந்தால் பிரசுரித்திருப்பார்களோ என்னமோ?
போலிகளுக்கு போலிகளைத்தானே பிடிக்கும்.
They are not able to digest the communal harmony
ReplyDeleteதினமலரின் ஆன்மாவை சரியான முறையில் புரிந்து எழுதியுள்ளீர்கள்.ஆம் அங்கு ஒரு இஸ்லாமியர் பெயரில் எவ்வளவு வேகமாக பேசவும் அனுமதிப்பார்கள்.இந்துக்கள் நாகரீகமாக ஆவேசமாக கருத்துரைப்பதகவும் அனுமதிப்பார்கள்.ஆனால் ஒரு இந்து அல்லது இஸ்லாமியர் மாற்று மதத்தினருக்காக பரிந்து பேசுவதை அனுமதிக்க மாட்டார்கள்.ஏனெனில் அவர்கள் செயல்திட்டம் மதநல்லிணக்கம் அல்ல.
ReplyDeleteஇருந்தாலும் உங்கலை சொல்லவேண்டும் ....சாக்கடையில் கல்லெறிந்துவிட்டு கத்தினால் என்ன செய்வது....
ReplyDelete