"உனக்கு அறிவு இருக்கா?" என்பதுதான் இப்போது சமூக வலைத்தளங்களில் உலாவுகிற கேள்வி.
அந்த சம்பவத்தின் காணொளியை நானும் பார்த்தேன்.
தான் நடத்திய நிகழ்ச்சிக்கு தொடர்பில்லாத கேள்வி என்று பதில் சொல்ல மறுத்திருக்கலாம். கருத்து எதுவும் இல்லை என்றும் சொல்லி இருக்கலாம். பொறுப்பான ஒரு கலைஞராக தனது கண்டனத்தைக் கூட பதிவு செய்திருக்கலாம். இல்லையேல் எந்த பதிலும் சொல்லாமல் கடந்தும் போயிருக்கலாம்.
அதை விடுத்து "உனக்கு அறிவு இருக்கா" என்ற பதில் கேள்வி அவசியமற்ற ஒன்று என்றால் "உனக்கு அறிவு இருக்கிறதா என்பதை எந்த அறிவை வைத்து கண்டு பிடித்தாய்" என்ற கேள்வி கொஞ்சம் கூட அவசியமற்றது.
அவசியமற்ற ஒரு சர்ச்சையை இளையராஜா தவிர்த்திருக்கலாம் என்பதே அவரது இசையின் வெறியனான எனது கருத்து.
Right. Can Ilayraja be humble?
ReplyDelete//"உனக்கு அறிவு இருக்கிறதா என்பதை எந்த அறிவை வைத்து கண்டு பிடித்தாய்" /இந்த கேள்வி மூலம் அவர் பெரிய "தத்துவஞானி" போன்ற இறுமாப்புடனே, நின்றார்.
ReplyDeleteஎப்போ ஞானியாக்கினார்களோ! அப்போதிருந்து இந்த வியாதி! இசை ராஜாவுக்கு முற்றி விட்டது. அதை இப்போ அனுபவிக்கிறார். இவருக்கு இசையில் மட்டுமே அனுபவம் அதிகம்! என்பதை எல்லோருக்கும் தெரியப்படுத்திவிட்டார்.
பொதுவாழ்வில் உள்ளோர் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
ReplyDelete"உனக்கு அறிவு இருக்கிறதா என்பதை எந்த அறிவை வைத்து கண்டு பிடித்தாய்"
ReplyDeleteகண்டிப்பாக தவிர்த்திருக்க வேண்டிய வார்த்தைகள்
ரொம்பத் திறமை உள்ளவர்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள். இதனைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை.
ReplyDelete