Tuesday, December 22, 2015

கீர்த்தி ஆஸாதின் அதிரடி ஆட்டம் - ஜெய்ட்லி அவுட்



கிரிக்கெட் வாழ்க்கையில் அவ்வளவாக பிரகாசிக்காதவர் கீர்த்தி ஆஸாத். அரசியலில் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் அவ்வளவு பிரபலமான அரசியல்வாதி என்றும் சொல்ல முடியாது.

கிரிக்கெட்டில் அவர் கையாண்ட அதிரடி பாணியை இப்போது அவர் தனது சொந்தக்கட்சி பிரபலம் மீதே கையாள எப்படி மீள்வது என்று தெரியாமல் பாஜக தடுமாறுகிறது.

அசிங்கப்படுத்த முயல்பவர்களே அசிங்கப் படுவார்கள்  என்று சில தினங்கள் முன்பு நான் எழுதிய பதிவு நிஜமாகிக் கொண்டிருக்கிறது. அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக மோடி வகையறாக்கள் செய்த முயற்சி இப்போது அருண் ஜெய்ட்லிக்கு எதிராகவே திரும்பி விட்டது. 

டெல்லி கிரிக்கெட் அசோசியேஷனின் தலைவராக அருண் ஜெய்ட்லி இருந்த போது கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது என்ற அரவிந்த் கேஜ்ரிவாலின் குற்றச்சாட்டிற்கு எதிராக அவதூறு வழக்கு போட்ட ஜெய்ட்லி அதே குற்றச்சாட்டுக்களை கீர்த்தி ஆஸாத் சொல்கிற போது வாய் திறக்க மறுக்கிறார்.

முடிந்தால் என் மீதும் வழக்கு தொடுங்கள் என்று கீர்த்தி ஆஸாத் சொல்லும் போது இந்தியாவின் மிகப் பெரிய சட்ட நிபுணர் அருண் ஜெய்ட்லி ஏன் பதில் பேசவில்லை?

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அருண் ஷோரி போன்றவர்களை ஒதுக்கித் தள்ளிய அமித் ஷா, மோடி கும்பல் ஏன் இப்போது மௌனமாக உள்ளது?

மொத்தத்தில் கீர்த்தி ஆஸாத்தின் அதிரடி ஆட்டத்தில் அருண் ஜெய்ட்லி இப்போது தடுமாறிக் கொண்டிருக்கிறார்.

அடுத்த பந்தில் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பி விடுவார் போல!
 

No comments:

Post a Comment