Wednesday, December 2, 2015

அமெரிக்கா பழமையான ஜனநாயக நாடா? நோ மிஸ்டர் ஒபாமா






மெரிக்க ஜனாதிபதி ஒபாமா நமது  நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உரை நிகழ்த்தி விட்டு  நாடாளுமன்றத்தில் உள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில்  உலகின் மிகவும் பழைமையான ஜனநாயக நாட்டிலிருந்து, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு வாழ்த்துக்கள் ( Greetings from the World’s  Oldest Democracy to  the Largest Democracy ) ’’ என்று எழுதியிருந்தார்

மாலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு விருந்து அளிக்கப்பட்ட சமயத்தில் அவரிடம் இதை நான், “நீங்கள் உங்கள் நாட்டை பழைமையான ஜனநாயக நாடு என்று வரையறுத்திருப்பது தவறு,’’ என்று சுட்டிக்காட்டினேன். அவர், “ஏன்?’’ என்று கேட்டார். நான் அவரிடம், “நீங்கள் உங்கள் நாட்டில்  ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அனைவருக்கும் 1962 ல்தான் வாக்களிக்கும் உரிமையை அளித்தீர்கள்.  அதாவது நீங்கள் பிறந்து ஓராண்டு கழிந்தபின்னர்தான். ஆனால், நாங்கள் 1950 லேயே அனைவருக்கும் வாக்குரிமை கொடுத்திருக்கிறோம் என்று சொன்னேன்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர்
தோழர் சீத்தாராம் யெச்சூரி பேசியதிலிருந்து.

நேற்று முன் தினம் எழுதிய பதிவில் உள்ளதுதான். முழுமையாக படிக்காதவர்களுக்காக இதை மட்டும் தனியாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

4 comments:

  1. யெச்சூரி இந்த விஷயத்தில் கருத்துப்பிழை செய்துவிட்டார். அமெரிக்கா 1869ம் வருடம் அரசியல் சட்டத்திருத்தம் மூலமாக ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு ஓட்டளிக்கும் உரிமையை அளித்துவிட்டார்கள். ஆனாலும், அங்கங்கே பல காரணங்களைக் காட்டி (படிப்பின்மை, வரி செலுத்தாமை, etc.) அவர்களை முழுமையாக ஓட்டளிக்க முடியாமல் தடுத்தார்கள். அதைத்தான் 1965ல் ஒரு மத்திய அரசியலமைப்பு சட்டத்தின் மூலமாக முழுமையாக விலக்கினார்கள். மேல் தகவலுக்கு இங்கே பார்க்க https://www.aclu.org/files/VRATimeline.html?redirect=timeline-history-voting-rights-act

    ReplyDelete
  2. தோழர் யெச்சூரி சொன்னது சரிதான் என்பது உங்களது பதிலிலேயே உள்ளது சார். நீங்கள் சொல்வது வடிவேலு ஜோக் போல "வரும் ஆனா வராது" பாணி. எப்போது முழுமையாக அனைவருக்கும் வாக்குரிமை அமலானது என்பதுதானே முக்கியம்!

    ReplyDelete
  3. ஒபாமா இப்படியெல்லாம் எடுத்து விடும் போது, சீத்தாராம் யெச்சூரி போன்றவர்கள் கவனத்தில் எடுப்பார்கள் என்பதை அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete