Sunday, December 20, 2015

தெளிவா குழப்பாதீங்கய்யா, ஜட்ஜய்யா




இந்த உச்சநீதி மன்றத் தீர்ப்பை படித்தற்கு பதிலாக இன்றைய ஞாயிற்றுக் கிழமையை வேறு எப்படியாவது  உருப்படியாகக் கழித்திருக்கலாம். 

அர்ச்சகர் ஆகமப் பிரச்சினை தொடர்பான தீர்ப்பைப் பற்றித்தான் சொல்கிறேன்.

மைக்கேல் குன்கா கொடுத்த ஆயிரம் பக்க தீர்ப்பை படித்தபோது கூட இப்படி ஒரு அயற்சி, குழப்பம், களைப்பு வரவில்லை. ஆனால் இந்த முப்பத்தி ஆறு பக்க தீர்ப்பு அப்படி ஒரு குழப்படி.

"அரசியல் சாசனப்படி  அர்ச்சகர் நியமனம் அமைய வேண்டும். ஆனால் ஆகம முறையை மீறக் கூடாது. ஆகம முறை அரசியல் சட்டத்திற்கு மேலானது அல்ல. ஆகம முறை அரசியல் சாசனத்திற்கு விரோதமானதும் இல்லை.

அரசாணையை தள்ளுபடி செய்யவில்லை. ஆனால் யாராவது கோர்ட்டுக்கு வர வாய்ப்புண்டு.  ஆகவே"

என்னவாவது செஞ்சு தொலைச்சுக்குங்க, இப்ப எங்களை ஆளை விடுங்க"

என்பதுதான் தீர்ப்பின் சாராம்சம்.

உனக்கு அறிவு இருக்கு என்பதை எந்த அறிவை வச்சு கண்டுபிடிச்சே என்பது நியாயமான கேள்வி என்பது இப்போது தீர்ப்பை படிக்கையில் புரிகிறது. 

நமக்கு அறிவு இருக்கிறது என்பதை கண்டுபிடித்த அறிவிற்கும் மேலான அறிவு இருந்தாலும் இந்த தீர்ப்பை தெளிவாக புரிந்து கொள்ள முடியுமா என்பது சந்தேகமே.

என்ன குழப்பமா இருக்கா?

நானும்தான்.

இந்த தீர்ப்பை படிச்சு குழம்பிப் போனதால என்ன செய்யறோம்னு தெரியாம கே டி.வியில நரசிம்மா சினிமா எல்லாம் பார்த்தேன். 

பின் குறிப்பு : மேலே உள்ள படத்தில் நரசிம்மா பட வசனத்தின் ஆங்கில மொழியாக்கம் இருக்கிறது. ஒரே நாளில் எனக்கு இரண்டு தண்டனை. இரண்டும் நானே தேடிக் கொண்டது.
   

4 comments:

  1. நாட்டுநடப்புகள் தெளிவின்றி இவ்வாறே செயல்படுகின்றன.

    ReplyDelete
  2. ஒரே நாளில் இரண்டு தண்டனை
    தாங்காது நண்பரே தாங்காது

    ReplyDelete
  3. நல்லாவே குழப்புறாங்க போல!

    ReplyDelete
  4. நீதியில் நிதி புகுந்துவிட்டு

    ReplyDelete