Wednesday, April 24, 2013

உண்டியல் குலுக்குவது கேவலமா என்ன?

ஒரு அனாமதேயம் கொஞ்ச நாளாக காணாமல் போயிருந்தது.
அது போடும் கமெண்டுகளை எல்லாம் டெலீட் செய்து கொண்டிருந்த
காரணத்தால் சூடு, சொரணை வந்து  இனி அபத்த கமெண்ட் எழுதப்
போவதில்லை என்று முடிவெடுத்து விட்டது என்று நினைத்திருந்தேன்.
நாய் வாலை  நிமிர்த்த முடியுமா? அதிலும் இது சொறி நாய் வேறு.

அந்த அனாமதேயம் அவ்வப்போது உண்டியல் குலுக்குவது பற்றி
வேறு நையாண்டி செய்யும்.  நானே ஒரு  நிமிடம் கேட்டுக் கொண்டேன்,

உண்டியல் குலுக்குவது என்ன அவ்வளவு கேவலமா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இழிவுபடுத்துவதாக நினைத்துக்
கொண்டு கருணாநிதி, ஜெயலலிதா உட்பட பலரும் கிண்டல்
செய்துள்ளார்கள்.

ஆம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களிடம் உண்டியல் ஏந்தி
நிதி திரட்டி கட்சிக்கான இயக்கங்களை நடத்துகிறது. மக்களுடைய
பிரச்சினைகளுக்காக போராடுகின்ற ஒரு இயக்கம், தனது
கோரிக்கைகள் என்ன என்று நோட்டீஸ் கொடுத்து விளக்கி
உண்டியல் குலுக்குகிறது.

இதிலே அவமானம் என்ன இருக்கிறது?

ஆட்சிப் பொறுப்பில் இருந்து கொண்டு ஊழல் செய்பவர்களுக்கு
உண்டியல் குலுக்க வேண்டிய அவசியம் கிடையாது.

ஆளூம் வர்க்கம் என்ற பந்தாவில் வணிகர்களை மிரட்டி
பணம் பறிப்பவர்களுக்கு உண்டியல் குலுக்க வேண்டிய அவசியம்
கிடையாது. 

இந்த வேலையை செய்து முடித்தால் இவ்வளவு ரூபாய் கமிஷன்
என்று தரகு பேசி லஞ்சம் வாங்குபவர்களுக்கு உண்டியல்
குலுக்க வேண்டிய அவசியம் கிடையாது.

பணக்காரர்களுக்கான கொள்கைகளை உருவாக்கி, ஆதரிக்கும்
கட்சிகளுக்கு  உண்டியல் குலுக்க வேண்டிய அவசியம் கிடையாது.

ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி அவ்வாறு செய்வதில்லை. அதனால்
நேரடியாக மக்களை அணுகி உண்டியல் குலுக்கி நிதி வசூல்
செய்கிறது.

உண்டியல் குலுக்குபவர்கள் எல்லோரும் இதை பெருமையாகவே
கருதுகிறார்கள். வெளிப்படையாக நடக்கின்றது இந்தப் பணி.

திருடவில்லை, முறைகேடு செய்யவில்லை, அடுத்தவனிடம்
லஞ்சமாக கையேந்தவில்லை. அரசு கஜானாவில் கை வைக்கவில்லை.
எனவே அனாமதேயங்கள் இனி இது பற்றி கவலைப்பட வேண்டாம்.

மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி  மக்களிடம் உண்டியல் ஏந்துவது
பற்றி கிண்டலடிப்பவர்கள், கோயில் உண்டியல்கள் பற்றி ஏன் 
எதுவும் கிண்டலடிப்பதில்லை. திருப்பதி உண்டியல் அளவிற்கு
உலகில் எங்குமே வசூலாவது கிடையாதே! 

கொடி நாளன்று முன்னாள் ராணுவத்தினரின் நலனுக்காக 
ராணுவ தளபதிகள், முதலமைச்சர்கள் உள்ளிட்டு உண்டியல்
ஏந்துவார்களே, இது இழிவா என்ன?

பல ஹோட்டல்களில் கல்லாப் பெட்டிகள் முன்பாக சில 
ஆதரவற்றோர் இல்ல உண்டியல்கள் இருக்கும். இதில் 
ஏதேனும்  அவமானன் உள்ளதா என்ன?

கருணாநிதியின் பிறந்தநாளில் கூடத்தான் உண்டியல் வைத்து
நிதி வசூல் செய்கிறார்கள். அப்போது அவருக்கு தான் அடுத்தவர்
பற்றி கிண்டலடித்தது மறந்து போய் விடும்.

எது கேவலம் தெரியுமா?

ஒரு அனாமதேயத்திற்கு  நல்லவன் ஒருவனை பிடிக்காது. அவனை ஒழிப்பதே  ஒரே வேலை என்று பிழைப்பாய் இருப்பான். ஆனாலும் 
அனாமதேயம் ஒரு மோசடிப் பேர்வழி என்பதால் அவனை சீண்ட
யாரும் கிடையாது என்பதால் அந்த அனாமதேயத்தின் சூழ்ச்சிகள்
பலிக்காது. அதன் எந்த நாடகமும் யாரிடமும் எடுபடாது. அதனால் அனாமதேயத்திற்கு  இன்னும் பைத்தியம்  முற்றி விடும். அந்த சூழலில் அந்த பிடிக்காதவன் பெயரைச் சொல்லியே அனாமதேயம் நாலு பேரிடம் காசு வசூல் செய்வான். பிடிக்காதவன் பெயரை வைத்துக் கொண்டே விளம்பரம்  தேடுவான். 

இதுதான் கேவலமான பிழைப்பு

3 comments:

  1. When you collect Rs.10 from 1000 people, the purpose of collecting the money reaches 1000 people.That is very important.
    Of course there are aberrations in communist party also.

    ReplyDelete
  2. sri KKK ! sri Kamalnayan Bajaj was treasherer of congress party! Funds for the congress party collected thro" hundi ! The top man of the Bajaj Capital is the greatgrand son of K.N.Bajaj..I accept there might be aberrations ! ---kashyapan .

    ReplyDelete
  3. மக்களிடம்தானே கையேந்துகிறோம். மகேசனிடமல்லவே. மேலும் அனாமதேயங்களுக்கு கவலைபட வேண்டாம்

    ReplyDelete