Tuesday, April 9, 2013

திராவிட இயக்கத்தின் மெகா கொள்கை விற்பனை இயக்கம்





சமூக நீதி, பகுத்தறிவுக் கொள்கைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட திராவிட இயக்கம் இன்று தனது கொள்கைகளில் நீர்த்துப் போய் வெறும் வணிக நிறுவனங்களாக மட்டுமே செயல்படுகின்றது என்பதை யாருக்கும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. கொள்கைகள் என்பது அறவே கிடையாது என்பதற்கு இதோ இன்னும் ஒரு உதாரணம்.

திமுக தலைவரது மனசாட்சியின் மகன்கள்  ( அதாங்க மாறன் பிரதர்ஸ்) தினகரன் பத்திரிக்கை நடத்துவது எல்லோருக்கும் தெரியும். அதன் துணை நிறுவனமாக சூரியன் பதிப்பகம் என்ற பெயரில் புத்தகங்களை வெளியிட்டு வருகின்றார்கள்.

புதிய புத்தகங்கள் பற்றிய பட்டியல் இன்று பார்த்தேன்.

அந்தப் பட்டியலை நீங்களும் பாருங்கள்

திராவிட இயக்க வரலாறு

ராசிக் கோயில்கள்

வளம் தரும் விரதங்கள்

என்ன பிரச்சினைக்கு எந்த ஆலயத்தில் தீர்வு கிடைக்கும் என சித்தர்கள் சொல்லும் ரகசியங்கள்

பலன் தரும் ஸ்லோகங்கள்

சதுரகிரி யாத்திரை ஆன்மீக அனுபவங்கள்

ஸ்ரீமத் பாகவதம்.

இதில் எல்லா புத்தகங்களையும் தாத்தா கலைஞர் படிக்கவும் அனுப்பி வைப்பார்கள் என்று நம்புகிறேன். அடுத்த பதிப்பிலிருந்து அவரது முன்னுரையையும் வெளியிட்டால் விற்பனை அமோகமாக இருக்குமே!

1 comment:

  1. திராவிடம், பகுத்தறிவு போன்றவை எல்லாம் தாத்தாவிற்கு கெட்டவார்த்தைகள், தேர்தல் வேறு வருகிறது.

    ReplyDelete