கலைஞருக்கு
என்றும் எதிரி அவரேதான். அவர் உதித்த வார்த்தைகள்தான். திமுக ஒன்றும் சங்கர மடமல்ல
என்ற அவரது பிரசித்தி பெற்ற வசனத்தை அவரது மகன் அழகிரியே அவரைப் பார்த்து
சொல்வதையும் அவர் கேட்க வேண்டியிருந்தது.
அது போலத்தான்
அவர் இன்று ட்விட்டரில் யுகாதி வாழ்த்து சொன்னதும் சர்ச்சையாகியுள்ளது.
பலர் ஒரு
பண்டிகை கொண்டாடுகிறபோது அதற்கு வாழ்த்து சொல்வதை சர்ச்சையாக்க வேண்டிய அவசியம்
கிடையாதுதான்.
ஆனால்
அதற்குக்
காரணமும் அவர்தான்.
சித்திரை
முதல் நாள் பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டிற்கும் இன்று ஆந்திர, கர்னாடக மக்கள்
கொண்டாடும் யுகாதிக்கும் அடிப்படையில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது. சித்திரை முதல் நாள் தமிழ்ப்
புத்தாண்டு கிடையாது என்று அவர் வம்படியாக தை முதல் நாள் என்று அவர் மாற்றியதால்
இன்று அவரை எல்லோரும் கேள்வி கேட்கிறார்கள்.
பஞ்சாங்கத்தின்
அடிப்படையிலான புத்தாண்டு என வருகிறபோது தமிழ் புத்தாண்டை புறக்கணித்து தெலுங்கு,
கன்னட புத்தாண்டுகளுக்கு வாழ்த்து சொல்கிற போது கலைஞர் தடுமாறுவது நன்றாகவே
தெரிகிறது.
பாவம் வயதாகி
விட்டதால் வரும் கோளாறு.......
ஆனால் அவரது
கலைஞர் டி.வி தமிழ்ப் புத்தாண்டை புறக்கணிப்பது கிடையாது. விடுமுறை தின
கொண்டாட்டம் என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி கல்லா கட்டி விடும்.
மாறன்
பிரதர்ஸ் சன் டி.வி தொடங்கியதே தமிழ்ப் புத்தாண்டு அன்றுதான் என்பது நினைவில்
உள்ளதல்லவா?
கலைஞரின் உளறல் ஒன்றும் புதிதல்ல, மேலும் அவர் இளமையாய் இருந்த பொழுதும் இப்படிதான் மாற்றி மாற்றி சொல்லி உளறிக்கொண்டிருப்பர்.
ReplyDelete//கலைஞர் டி.வி தமிழ்ப் புத்தாண்டை புறக்கணிப்பது கிடையாது. விடுமுறை தின கொண்டாட்டம் என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி கல்லா கட்டி விடும்.
ReplyDeleteமாறன் பிரதர்ஸ் சன் டி.வி தொடங்கியதே தமிழ்ப் புத்தாண்டு அன்றுதான் என்பது நினைவில் உள்ளதல்லவா?//
.
அடியிங்க...அடியிங்க நல்லா அடியிங்க!!!. ஆனா எங்களுக்கு தான் வலிக்காதே..!!!????.