Tuesday, April 2, 2013

நெத்தியடி

உச்ச நீதிமன்றம் அளித்துள்ள நெத்தியடித் தீர்ப்பு இது


புற்றுநோய் மருந்துக்கு காப்புரிமை கோரிய அந்நியக் கம்பெனி உச்சநீதிமன்றம் தள்ளுபடி

 

புதுதில்லி, ஏப். 1 -சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நிறுவனமான நோவர்டிஸ், தாங்கள் சந்தைப் படுத்தி வரும் இரத்தப் புற்று நோய்க்கான மருந்தான ‘க்ளிவெக்’ மருந்தின் காப்புரிமையைக் கோரி தொடுத்திருந்த வழக்கினை உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்தது. இந்த மருந்தின் அடிப்படைப் பொருள் கொண்டு மற்ற நிறு வனங்கள் தயாரிப்பதைத் தடை செய்யும் நோக்கில் மேற்கண்ட அந்நியப் பன்னாட்டு மருந்துக் கம்பெனி இந்த மனுவை தாக்கல் செய்தது.

நீதிபதிகள் அப்தாப் ஆலம், ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகி யோர் அடங்கிய அமர்வு முன் னர் இந்த வழக்கு வந்தது. டிசம் பர் 4க்குப் பிறகு சுமார் இரண் டரை மாதங்கள் தொடர்ந்து நடந்த சூடான விவாதங்களுக் குப் பிறகு திங்களன்று முடிவு அறி விக்கப்பட்டது. இந்த மனு வைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். மேலும் நோவர்டிஸ் நிறுவனத் துக்கு அபராதமும் விதிக்கப் பட்டது.சென்னையில் உள்ள ஐபி ஏபி என்ற மரபுரிமை அறிவு சார் காப்புரிமை வாரியம், நோவர்டிஸ் அளித்த காப் புரிமை மனுவை நிராகரித்தது.

 இதன் பின்னரே இந்த நிறு வனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது.நோவர்டிஸ் நிறுவனத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட் டதை அடுத்து அந்த நிறுவனத் தின் கடந்த 7 வருட உரிமை கோரல் போராட்டம் இந்தியா வில் தோல்வி அடைந்துள்ளது. மேலும், பன்னாட்டு நிறுவனங் களின் மருந்து தொடர்பான இடுபொருள் நுட்பத்துடன் கொண்டு தயாரிக்கப்படும் இந்திய நிறுவனங்களின் உற்பத் தியைக் கட்டுப்படுத்தும் போக் கும் முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதை அடுத்து இரத்தப் புற்றுநோய்க்கான இந்த மருந் தின் தயாரிப்பு விலை மலிவாக இருக்கும். வழக்கம்போல் மலி வான விலையில் இந்த மருந்து இந்தியச் சந்தைகளில் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.அந்த வகையில் உச்ச நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பு, உயிர் காக்கும் மருந்துகள் தயாரிப் பில் மாறுதலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய மருந்துச் சந்தை யைக் குறிவைத்து செயல்படும் மேலை நாட்டு மருந்து நிறு வனங்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பெரிய பின்னடைவு என் றும் கருதப்படுகிறது.

நோவர்டிஸ் நிறுவனப் பங்குகள் 7சதவீதம் சரிவு

நோவர்டிஸ் நிறுவன இரத்தப் புற்றுநோய்க்கான மருந்து காப்புரிமை கோரும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அந்த நிறுவன மனுவைத் தள் ளுபடி செய்த சிறிது நேரத்தில், அந்த நிறுவனத்தின் பங்குகள் 7சதவீதம் சரிந்தது.நோவர்டிஸ் பங்குகள் காலை 10.47க்கு ரூ.571ஆகச் சரிந் தது. பின்னர் மேலும் சரிந்து மிகக் குறைந்த அளவாக ரூ.558க்கு சரிந்தது. மும்பை பங்குச் சந்தையின் ஆரோக்கி யம் சார்ந்த நிறுவன பங்குகள் பிரிவில் சரியான முன்னேற்றம் காணப்படாமல், கடந்த காலாண்டு கால அளவில் நோவர்டிஸ் பங்குகள் 15சத வீதம் சரிந்து காணப்பட்டது.

நன்றி - தீக்திர் நாளிதழ் 02.04.2013


No comments:

Post a Comment