Monday, April 15, 2013

இறந்து போனவருக்கும் உயிரோடு இருப்பவருக்கும் வித்தியாசம் தெரியாத இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் முட்டாள்தனமான அஞ்சலி,





இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை மறைந்த பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது. அது அவரது இறப்பை விட மிகப் பெரிய கொடுமை. நம்மவர் படத்தில் மஹேஷ் இசையில் “ சொர்க்கம் என்பது நமக்கு “ முதல் பாடல். ரஹ்மான் இசையில் “மானாமதுரை மாமரத்து கிளியே”  ஹிட்டான பாட்டு. ஏய் நீ ரொம்ப அழகா இருக்க படத்துக்கு இசையமைப்பாளர் என்றெல்லாம் அபத்தமாக உளறியுள்ளது.

இறந்து போன முதுபெரும் பாடகருக்கும் தற்போது உச்சத்தில் உள்ள இளம் பாடகருக்கும் வித்தியாசம் தெரியாமல் எழுதியுள்ளார்கள். உயிரோடு இருப்பவரை கொலை செய்துள்ளார்கள் என்றால் கூட சரியாக இருக்கும். டெஸ்க் வொர்க் என்று பத்திரிக்கையுலகில் சொல்வார்கள். அதற்கு இதுதான் உதாரணம். கூகிளில் ஸ்ரீனிவாஸ் என்று தேடி கிடைத்ததை அப்படியே செய்தியாக்கி விட்டார்கள்.

இசை பற்றியோ பி.பி.எஸ் பற்றியோ எதுவும் தெரியாத ஒரு நபர் இதை எழுதியுள்ளார். இந்த முட்டாள்தனத்தை கண்டித்து நான் போட்ட பின்னூட்டங்களை மட்டும் உடனடியாக நீக்கி விட்டார்கள். ஒழுங்காக எழுத துப்பில்லாவிட்டாலும் இந்த ரோஷத்திற்கு ஒன்றும் குறைச்சல் கிடையாது.

பி.பி.ஸ்ரீனிவாசஸ் மறைவை விட இந்த அஞ்சலி மிகவும் சோகமானது.

ஒருவேளை பி.பி.ஸ்ரீனிவாஸ் மறைந்த சோகத்தில் தண்ணியடித்து போதையில் எழுதியிருப்பாரோ?

இதோ அதன் ஸ்க்ரீன் ஷாட் இணைத்துள்ளேன். அபத்தம் புரியும். 




 

2 comments:

  1. இதைதான் , PBS அவர்கள் ,மயக்கமா ,கலக்கமா ,மனதிலே குழப்பமான்னு அருமையாப் பாடியிருக்கார் போலும் !

    ReplyDelete
  2. என்ன கொடுமை!
    The current comments say the article was copied from wikipedia.
    But doesn't the fellow differentiate the legend PBS and the younger Srinivas... sheer irresponsibility and insensitivity.

    ReplyDelete