Monday, April 29, 2013

நீங்களாவது கொஞ்சம் அறிவோடு பேசலாமே அன்புமணி ராமதாஸ் அவர்களே?

சின்னய்யா என்று அழைக்கப்படுகின்ற முன்னாள் மத்திய அமைச்சர்
டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு, 

சில வருடங்கள் முன்பு உங்களையும் அப்போதைய ரயில்வே
இணை அமைச்சர் திரு வேலுவையும் வேலூரில் ஒரு மனு அளிக்க
சந்தித்தோம்.

இன்சூரன்ஸ்துறையில் அன்னிய மூலதன வரம்பை உயர்த்தக்கூடாது,
எல்.ஐ.சி பங்கு விற்பனை கூடாது என்பது அந்த மனுவின் கோரிக்கை.
அப்போது நீங்கள் சொன்னது எனக்கு நினைவில் உள்ளது. " இந்த 
மசோதா குறித்த உங்கள் அச்சம் நியாயமானது. அமைச்சரவையில்
கூட விவாதம் வந்தது. நான் பேசாவிட்டாலும் கூட சில அமைச்சர்கள்
அவசியமில்லையே என்று சொன்னார்கள்.ஆனால் அரசுக்கு சில
நிர்ப்பந்தங்கள் இருக்கிறது என்று இறுதியில் பிரதமரே சொன்ன பிறகு
எங்களுக்கு ஏற்றுக் கொள்வதை தவிர வழியில்லை. எல்.ஐ.சி பங்கு
விற்பனை மட்டும் நடக்காது என்று கருதுகிறேன்"

பரவாயில்லையே, இவர் நேர்மையாக அமைச்சரவையில் நடந்ததை
வெளிப்படையாக சொல்கிறாரே என்று நாங்கள் பேசிக் கொண்டோம்.

ஆனால் மரக்காணம் கலவரம் தொடர்பாக நீங்கள் உதிர்த்துள்ள
வார்த்தைகள் மூலம் அந்த நேர்மையிலிருந்து விலகி சென்று 
விட்டீர்கள் என்பதை உணர்த்துகின்றது. தந்தைக்கேற்ற தனயன்
என்பதை நிரூபித்து விட்டீர்கள்.

இழப்பீடு தருவதற்காக தலித்களே தங்கள் வீடுகளை கொளுத்திக் கொண்டார்கள் என்ற உங்கள் வார்த்தையில் நேர்மை கிடையாது.
அது பற்றி நான் பேசப் போவதில்லை.

அது கொஞ்சமாவது அறிவுபூர்வமாக இருக்கிறதா என்று 
யோசித்தீர்களா?

என்றைக்காவது  இழப்பீடு என்பது இழப்பை ஈடு கட்டுவதாக
அமைந்துள்ளதா?

எந்த அரசாவது இழப்பை விட கூடுதலாக இழப்பீடு கொடுத்துள்ளதா?

இழப்பீடின் மூலம் இழந்த பொருட்களின் ஒரு பகுதியை வேண்டுமானால்
சரி செய்ய முடியும், ஆனால்  இழந்த உழைப்பை மீண்டும் பெற
முடியுமா?

தர்மபுரி கலவரத்தில் இழப்பும்  நீதிமன்றம் அளித்த இழப்பீடும்
ஒன்றா?

உங்கள் கட்சி ஆட்கள் தகராறு செய்யும்போதுதான் சரியாக
அவர்கள் தங்கள் வீட்டைக் கொளுத்திக் கொள்வார்களா?

இழப்பீடு கிடைக்கும் என்றால், அது லாபகரமாக இருக்கும்
என்றால் தமிழகமெங்கும் உள்ள மக்கள் தங்கள் வீட்டை
கொளுத்திக் கொண்டே இருப்பார்களே?

காப்பீடு செய்திருந்தால் கூட இழப்பை முழுமையாக
ஈடு செய்ய முடியாது என்கிற போது, அரசு இழப்பீடுக்காக
யாராவது  வீடுகளை கொளுத்திக் கொள்வார்களா?

எந்த லாஜிக்கும் இல்லாத வாதம் உங்களுடையது.

உண்மையை மறைப்பதற்கு, அரசியல் சந்தர்ப்பவாதத்திற்காக
 எந்த அளவிற்கும் தரம் தாழ தயாராக இருப்பவர் உங்கள்
தந்தை. 

நீங்களும் அது போல ஒரு சந்தர்ப்பவாதிதானோ?


5 comments:

 1. சரியான கேள்வி? அரசியல் வாதிகள் காதில் இதெல்லாம் விழாது! இவர்களை தேர்தலில் புறக்கணிப்போம்!

  ReplyDelete
 2. Ramathas is the cheepest politician

  ReplyDelete
 3. Sir, Avarukku arivu irukkunnu ungalukku yaaru sonnathu ?

  Thavarana ethirpaarpu....

  வழக்கு போடுங்கள் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டதால் அவர் வேண்டுகோளை ஏற்று வழக்கு போடப்பட்டுள்ளது. -முதல்வர்

  Ippo paarunga oru vilakkam kudupparu....

  Sonai mutha.... kaathu rinnngunnutha....

  Sekar

  ReplyDelete
 4. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நாங்கள் சுதந்திரத்திற்க்காக போராடினோம் என்று சொல்லியா கட்சி ஆரம்பித்தார். அவர் சார்ந்த சாதி மக்களை கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேற்ற வேண்டும் என்று போராடினார் இடஒதுக்கீட்டை பெற்றார் அதனை அடுத்து அடுத்தவர்களிடம் போராடி குண்டடிப்பட்டு மால்வதைவிடுத்து கேட்கும் இடத்தில் இருப்பதைவிட கொடுக்கும் இடத்தில் இருக்கவேண்டும் என்று கட்சியை ஆரம்பித்தார்.

  ReplyDelete
 5. ஒவ்வொரு பெற்றோரும் தன் மகன் அல்லது மகள் படித்து டாக்ட்டராகவோ, எஞ்சினியராகவோ சமூகத்தில் நல்ல அந்தஸ்துள்ளவராகவோ ஆகவேண்டும் என்று என்னுகிறார்கள் அல்லவா அதையேதான் ராமதாசும் தன் மக்களோ அல்லது மகனோ முதல்வராகவேண்டும் என்று நினைக்கிறார் இது நியாயமான ஆசைதானே இதில் என்ன தவறு இருக்கிறது.

  ராமதாஸ் எப்படி வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கவேண்டும் என்று நினைத்திருந்தால் கருணானிதி குடும்பத்தை போல வியாபார ரீதியில் நாட்டையே கொள்ளையடித்திருக்கலாம் குடும்பத்தொலைக்காட்சிகள் மூலம் நாட்டையே சீரழித்திருக்கலாம் அப்படி செய்தாரா? ராமதாஸ் கலப்புத்திருமணத்தையா எதிர்க்கிறார் படிக்கும் மாணவிகளை சீரழிப்பதைதானே கண்டிக்கிறார் திருமா வளவன் தலித் இளைஞர்களால் இழுத்து செல்லப்பட்ட பணக்காரவீட்டுப் பெண்களை திரும்ப ஒப்படைக்க பேரம் பேசி பணம் வாங்கவில்லை என்று யாராவது மனதை தொட்டு சொல்லமுடியுமா?.

  ReplyDelete