Monday, April 22, 2013

பெட்டி கொடுக்கச் சொல்கிறார் ப.சிதம்பரம்





நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இன்சூரன்ஸ்துறையில் அன்னிய மூலதன வரம்பை 26 % லிருந்து 49 % ஆக உயர்த்துவதே தனது முன்னுரிமை என்று சிவகங்கைச் சீமான் நாடு நாடாகப் போய் சொல்லி விட்டு வந்துள்ளார். கடைசியாக அமெரிக்காவில் பேசியுள்ள போது அவர் என்ன கூறியுள்ளார் தெரியுமா?

எதிர்கட்சிகள் இந்த முடிவை எதிர்க்கிறார்கள். ஆகவே தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களை எதிர்க்கட்சிகளோடு பேச சொல்லியிருக்கிறேன். இந்த பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடந்து பிரச்சினை இல்லாமல் அன்னிய மூலதன வரம்பை உயர்த்த முடியும் என்று எதிர்பார்க்கிறேன்.

இந்த பேச்சுவார்த்தை என்பதன் அர்த்தம் என்ன என்று புரிகிறதா? தடுப்பணை போடும் எதிர்க்கட்சிகளை பெட்டி கொடுத்து சமாளியுங்கள் என நிதியமைச்சர் தனியார் கம்பெனிகளுக்கு சொல்லியுள்ளார் என்றுதான் அர்த்தம்.

அரசின் முடிவில் எந்த நியாயமும் இல்லாததால்தான் லஞ்சம் கொடுத்தாவது ஆதரவை திரட்ட வேண்டியுள்ளது. எந்த நெறிமுறையும் இல்லாத ஆட்சியாளர்கள் அல்லவா? அதனால்தான் பெட்டி மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இந்த சதிச்செயல்கள் அரங்கேற அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அனுமதிக்காது. நாடு முழுதும் இன்று பெரும் பங்கேற்போடு நடைபெற்றுள்ள எதிர்ப்பியக்கங்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறி உங்கள் தேசத் துரோகம் தொடர்ந்தால் உங்களை வீழ்த்துவதில் இன்சூரன்ஸ் ஊழியர்கள்தான் முன்னணியில் இருப்பார்கள்.

No comments:

Post a Comment