Monday, April 8, 2013

எல்.ஐ.சி கட்டிடத்தை எரித்தது ஜார்ஜ் பெர்னாண்டஸ்????





1975 ல் சென்னையின் பதினான்கு மாடி எல்.ஐ.சி கட்டிடம் எரிந்து போனது தமிழகம் முழுதும் அதிர்வலைகளை உருவாக்கியதை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த காலகட்டத்தில் நான் சிறுவனாக இருந்த போதிலும் நாளிதழ்களிலும் வாரப் பத்திரிக்கைகளிலும் அது குறித்த செய்தியை படித்தது நினைவில் உள்ளது.

குமுதம் பத்திரிக்கையில் படித்த ஒரு ஜோக் கூட நினைவிற்கு வருகிறது.

“ இனிமே இங்கிலீஷில 23 எழுத்துதான்

  ஏன்

  அதுதான் எல்.ஐ.சி எரிஞ்சு போச்சே “

எல்.ஐ.சி கட்டிட தீ விபத்திற்குப் பிறகு  “ நார்கல் “ என்ற தீயணைப்பு இயந்திரம் சென்னை தீயணைப்புத் துறையால் பெரிய கட்டிடங்களில் ஏற்படும் தீ விபத்துக்களின் போது பயன்படுத்துவதற்காகவே வாங்கப் பட்டது என்றும் செய்திகள் வந்தன.

கமலஹாசன், ஸ்ரீபிரியா நடித்த பாம்பு படமான “நீயா? “ வின் கிளைமாக்ஸ் காட்சியில் இந்த ‘ நார்கல் “ இயந்திரமும் நடித்திருக்கும்.

எல்.ஐ.சி யில் பணியில் சேர்ந்த பின்பு பல தோழர்களிடம் தீ விபத்து பற்றி கேட்டிருக்கிறேன். மின் கசிவுதான் காரணம் என்றுதான் எல்லோருமே சொல்லியுள்ளார்கள்.

ஆனால் இன்று கிடைத்துள்ள தகவலோ அதிர்ச்சி நம்பர் ஒன்.

ஹிந்து நாளிதழ் விக்கிலீக்ஸின் உதவியோடு அவ்வப்போது பல அதிர்ச்சி அணு குண்டுகளை வெடித்துக் கொண்டே இருக்கிறது. இன்று அது இரு வெடி குண்டுகளை வெடித்து இரு முகத்திரைகளை கிழித்துள்ளது.

அம்பலமான ஒரு முகம் ஜார்ஜ் பெர்ணான்டஸுடையது.
அவசர நிலைக் கால கதாநாயகனாய் சித்தரிக்கப்பட்ட ஜார்ஜ் பெர்ணான்டஸ்  மத வெறி பாஜகவோடு கூட்டணி வைத்தபோதே மதிப்பிழந்து போனார். ஆயுத பேர ஊழல், சவப்பெட்டி ஊழல் என்று பின்பு அசிங்கப்பட்டுப் போனார்.

அவசர நிலைக் காலத்தின் போதே அவரது தடுமாற்றமும் ஊசலாட்டமும் தொடங்கி விட்டது என்பதை இன்றைய செய்திகள் உணர்த்துகின்றது.

இந்திரா காந்திக்கு எதிரான போராட்டத்தை நடத்த அமெரிக்க உளவு நிறுவனம் சி.ஐ.ஏ விடம் நிதி உதவி கேட்டுள்ளார் இந்த உத்தம புத்திரர். அதற்காக பிரஞ்சு நாட்டு தூதரை நாடியுள்ளார். சி.ஐ.ஏ வுடன் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

தனது சக்தி என்ன என்பதையும் அவர் விவரித்துள்ளார். நாச வேலைகள் செய்வதற்கு தன்னிடம் முன்னூறு பேர் உள்ளதாகவும் நக்ஸலைட்டுகள் தொடர்பும் உண்டு என்றும் தென் இந்தியாவில் இரண்டு ரயில்வே பாலங்கள், பம்பாய் பூனா இடையே ஒரு பாலம் ஆகியவற்றை வெடி குண்டு வைத்து தகர்த்தது, பம்பாய் துறைமுகத்திலும் சென்னை எல்.ஐ.சி கட்டிடத்திற்கும் தீ வைத்தது தாங்கள்தான் என்றும் அவர் கூறியுள்ளதாய் செய்தி சொல்கிறது.

ஆனால் அவர் எதிர்பார்த்த உதவி கிடைக்கவில்லையாம்.

ஜனதா அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சராக கோகோ கோலா நிறுவனத்தை இந்தியாவிலிருந்து துரத்தியதன் மூலம் அமெரிக்க எதிர்ப்பாளர் என்ற சாதனைத் திலகமாக திகழும் ஜார்ஜ் பெர்ணான்டஸ் அமெரிக்க உளவு நிறுவனத்திடம்  பணம் கேட்டார் என்பது எவ்வளவு பெரிய முரண்பாடு.

இதற்கு அவர் விளக்கமளிக்க வேண்டும்.

உண்மையிலேயே இந்த குற்றச்செயல்கள் அவர் செய்ததுதானா இல்லை தலைநகரம் வடிவேலு போல ‘ நானும் ரௌடித்தான் நானும் ரௌடிதான்’ என்று பில்ட் அப்தானா என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

3 comments:

  1. No Chance, He was a Firebrand Politician, But will not put fire on a building. You communists oppose him because he joined with your enemy BJP

    ReplyDelete
  2. george is a firebrand socialist,he is a gandhian and he demolished indra chamcha dange's communist party in mumbai,that is why comrades are fabricating stories like this.

    ReplyDelete
  3. There is a possibility. No politician may be trusted...Many top bureaucrats, top defense people, well connected people taking huge kickbacks. All these people enjoy living in India without any suffering. Only the common man is affected in all fronts like housing, water, food, education, ...everything.

    ReplyDelete