Sunday, April 14, 2013

ஏன் இந்த விவாதம் ?




இந்த நாளா?
அந்த நாளா?
சித்திரை முதல் நாளா?
தை முதல் நாளா?
என்று சில விவாதங்கள்,
காரசாரமாய் கருத்து மோதல்கள்...

ஏழை மக்கள் மனதிலே
மகிழ்ச்சி வருமானால்,
இதன் பொருட்டு
பணமும் புழங்குமானால்,
நல்லதாய் உணவும்
புதிதாய் ஓர் ஆடையும்
சாத்தியமானால்

எந்த நாளாய் இருந்தால் என்ன?
அந்த நாளே
புத்தாண்டாய் இருக்கட்டும்.
இதற்கு ஏன் இங்கு விவாதம்?

பொற்காலமாய் ஆட்சி கொடுத்தவர்க்கு
மன்னர்கள் காலத்திலும் சரி
மக்கள் ஆட்சிக் காலத்திலும் சரி
வரலாற்றில் இடம் உண்டு.

மாற்றிக் கொண்டே இருந்த
துக்ளக்குகளுக்கும்
வரலாற்றிலும் இடம் உண்டு.

ஆட்சித் திறனால் வாய்ப்பில்லை
என
துக்ளக் மாற்றத்தால்
இடம் பிடிக்க நினைத்தவர்களுக்கு

போட்டியாக
நமக்குள்
ஏன் இங்கே விவாதம்?

அவரவர் முடிவு செய்யட்டும்,
அவர்களின் பொருளாதாரம் முடிவு செய்யட்டும்
தனக்கான புத்தாண்டு எந்நாள் என்று.....

1 comment:

  1. FROM 1968 IT IS CHITHRAI 1 HAS BEEN TAMIL NEW YEAR DAY FOR ME, BECAUSE, HI HI, I BORN THAT YEAR ONLY..

    ReplyDelete