Thursday, April 25, 2013

மதுரை உள்ளவரை






கோவலன் கொலையால்,
எரிந்த  மதுரை
மீண்டும் அதிர்ந்தது
உந்தன் கொலையால்.

உழைப்பால் உயர்ந்த உனக்கு
மக்கள் அளித்த பரிசு
மாமன்ற உறுப்பினர் பதவி.

உழைத்தாய், உழைத்தாய்,
அவர்தம் தாகம் தீர்க்க
தண்ணீர் கொணர்ந்தாய்,
நியாய விலைக் கடையின்
பெயருக்கேற்றார் போல்
அங்கே
நியாயம் நிலவச் செய்தாய்.

பிழைப்பாய் தேர்தலைப் பார்த்து
தோல்வியில் துவண்டு போன
இரக்கமில்லா கூட்டமொன்று,
பாதகர் கையில் மட்டுமல்ல,
பாலகன் கையிலும் கூட
ஆயுதம் அளித்து அனுப்பியது,
உழைப்பால் உயர்ந்த
உந்தன் உயிரைப் பறித்தது,
நிலமெங்கும் குருதி கொட்ட
விதையாய் விழுந்தாய் நீ...
உன் பெயரை உரக்கச் சொல்லும்
விழுதுகள் இன்று ஏராளம்.

மதுரை உள்ள வரை
மனிதர்கள் உள்ள வரை
தியாகத்தின் திரு உருவாம்
உந்தன் புகழும்
வாடாத மலராக
என்றென்றும் மணம் வீசும்,

( வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாமன்ற உறுப்பினர் தோழர் லீலாவதி அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி எழுதியது )

No comments:

Post a Comment