பாஸ்டன் வெடிகுண்டு சம்பவத்திற்கு காரணம் என்று இருவரில்
ஒருவரைக் கொன்று, இன்னொருவரை கைது செய்துள்ளனர்.
பாரக் ஒபாமா உணர்ச்சி வசமாக பேசியுள்ளார். பாதிக்கப்பட்ட
குடும்பங்களுக்கு குற்றவாளிகள் பதில் சொல்ல வேண்டும்
என்று ஒபாமா சொல்லியுள்ளார்.
ஆம் குற்றமிழைத்தவர்கள் பதில் சொல்லித்தான் தீர வேண்டும்,
அந்த குற்றச்செயலுக்கு என்ன காரணம் என்று.
சொல்வீர்களா ஒபாமா?
பனாமா நாட்டு ஜனாதிபதியை விமான விபத்து மூலம்
கொன்றது ஏன் என்று?
சிலி நாட்டு அதிபர் அலண்டேயின் கொலைக்கு என்ன
காரணம் ஒபாமா?
வியட்னாம் மீது ரசாயன ஆயுதங்களை பிரயோகித்தது
ஏன் என்று சொல்ல முடியுமா? இந்தப் படம் நினைவில்
உள்ளதா? இந்தப் பெண்ணிற்கு அமெரிக்கா என்ன பதில்
சொல்லப்போகிறது?
பிடல் காஸ்ட்ரோவைக் கொல்ல கொலைகாரர்களை அனுப்பிக்
கொண்டே இருந்தது நினைவில் உள்ளதா?
ஆப்கானிலும் இராக்கிலும் இன்னும் மனித உயிர்களை,
குழந்தைகளை, பெண்களை, அப்பாவிகளை உங்கள் ராணுவம்
கொன்று கொண்டே இருக்கிறதே, ஒவ்வொரு கொலைக்கும்
எப்போது காரணம் சொல்லப் போகின்றீர்கள்?
இதோ இந்த படத்தைப் பாருங்கள்,
ஜப்பானில் அணுகுண்டை பயன்படுத்தி லட்சக்கணக்கான
மக்களைக் கொன்ற தீவிரவாதக்குழு நாங்கள்தான் என்பதை
இந்த குழந்தைக்கு சொல்வீர்களா?
உலகம் முழுதும் எங்கள் ஆதிக்கம் மட்டுமே இருக்க வேண்டும்,
அதற்காக நாங்கள் எதையும் எங்கேயும் செய்வோம் என்பதை
சொல்வீர்களா?
அதன் பின் மற்றவர்களை பதில் சொல்லச் சொல்லுங்கள்,
உங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ளது பெரும் துயரம்தான்.
ஆனால் உங்களது நாட்டால் உலகம் முழுதும்
பெரும் துயரம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறதே,
அதற்கு பதில் சொல்லி விட்டு பிறகு மற்றவர்களை
கேள்வி கேளுங்கள் ஒபாமா....

No comments:
Post a Comment