காவல்துறையின்
கொடூர தாக்குதலுக்கு உள்ளாகி மரணத்தை தழுவிய மாணவர் சங்கத் தோழர் சுதிப்தா குப்தா
பற்றி சில தினங்கள் முன்பாக எழுதியிருந்தேன்.
எலக்ட்ரிக்
கம்பத்தில் முகத்தை முட்டிக் கொண்டு இறந்து போனதாய் பொய் சொன்ன மம்தா பானர்ஜி,
பெங்களூரில் அலட்சியமாகவும் ஆணவமாகவும் இந்த மரணம் பற்றி என்ன சொல்லியுள்ளார்
தெரியுமா?
இது ஒரு
சாதாரணமான, அல்பத்தனமான சம்பவம்.
ஆங்கில
வார்த்தைகளை அப்படியே சொல்ல வேண்டுமானால்
Minor and Petty Incident
அமைதியாக
ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களை காவல்துறை அடித்தே கொல்வது இவருக்கு அல்பமான சம்பவமா?
மனித
உயிருக்கு இவர் தரும் மதிப்பு இதுதான்.
ஏராளமான
திறமைகள் படைத்த ஒரு இளைஞனைக் கொன்று விட்டு அது பற்றி சிறிதளவு கூட குற்ற உணர்வே
இல்லாமல் அலட்சியமாக வார்த்தைகளை உதிர்த்து விட்டு செல்கின்ற மம்தா பானர்ஜி மனித
ஜன்மமா என்று கூட சந்தேகம் வருகின்றது.
ஹிட்லர்கள்
சாவதில்லை. நரேந்திர மோடியாக, மம்தா பானர்ஜியாக உலவிக் கொண்டுத்தான்
இருக்கிறார்கள்.
இன்னும்
இரண்டு மாணவர்களின் மரணங்கள் பற்றியும் கூட இத்தருணத்தில் நினைவு கொள்வது சரியாக
இருக்கும். உதயகுமார், ராஜன் கொல்லப்பட்டது பற்றி நாளை பார்ப்போம். அவையும்
ஆட்சியாளர்களின் கொடூரத்திற்கான சாட்சியங்கள்.
Correctly said
ReplyDelete