Wednesday, April 3, 2013

பதில் சொல்லித்தான் தீர வேண்டும்.




மம்தாவின் அராஜகத்திற்கு இன்னும் ஒரு உயிர் பலியாகியுள்ளது.
அராஜகப் போராட்டங்களை நடத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் 
ஏராளமான தொண்டர்களை மாவோயிஸ்டுகளின் துணையோடு
கொன்று குவித்து அந்த ரத்தச் சேற்றில் ஆட்சியமைத்த
மம்தா பானர்ஜிக்கு ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் 
வேப்பங்காயாய் கசக்கிறது.

கல்லூரியில் தேர்தல் வேண்டும் என்பதற்காக ஆர்ப்பாட்டம்
நடத்திய  மாணவர் சங்கத் தோழர்கள் மீது காவல்துறை
மிருகத்தனமாக தாக்குதல் நடத்தியதில் சுதிப்தா குப்தா என்ற
இளம் மாணவர் இறந்து போயுள்ளார்.

மின்சாரக் கம்பத்தின் மீது அந்த மாணவனே மோதிக் கொண்டதால்
இறந்து போனான் என்ற மம்தா பானர்ஜியின் பொய்யை
பிரேதப் பரிசோதனை அறிக்கை தகர்த்துள்ளது.காவல்துறை
காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதால்  ஏற்பட்ட 
காயங்களால்தான் அந்த மாணவன் இறந்து போனான் என்பது
நிரூபணமாகி விட்டது. 

என் மகனின் இறப்பிற்கு நியாயம் கிடைக்கும் வரை நான்
ஓய மாட்டேன் என்று சுதீப்தா குப்தாவின் தந்தை 
கூறியுள்ளார். 

இந்திய மாணவர் சங்கமும் மேற்கு வங்க மாநில மார்க்சிஸ்ட்
கட்சியும் போராட்ட களத்தில் இறங்கியுள்ளன.

அந்த தந்தையின் கண்ணீருக்கு மம்தா பானர்ஜி பதில்
சொல்லாவிட்டாலும் மேற்கு வங்க மக்கள் தக்க பதில்
கண்டிப்பாக சொல்வார்கள்.

No comments:

Post a Comment