Tuesday, April 23, 2013

கேரளாக்காரங்க ஏன் இன்னும் பிரச்சினை செய்யல?






செவன் அப் விளம்பரம் பார்த்தீர்களா? அதிலே செவன் அப் குளிர்பானத்தை பார்த்ததும் கதகளி நடன உடை அணிந்திருக்கும் ஒருவர் குத்து டான்ஸ் ஆடுவார்.

அதைப் பார்த்ததும் எனக்கு தோன்றியதுதான் இந்த பதிவின் தலைப்பு.

எங்கள் மண்ணின் பாரம்பரிய நடனமான கதகளியை இந்த விளம்பரம் இழிவு படுத்துகின்றது என்ற எதிர்ப்புக் குரல் வரும்  என்று எதிர்பார்த்தேன். ஏனோ தெரியவில்லை, அமைதியாகவே உள்ளார்கள். ஒரு வேளை இது போன்றவற்றை கேரள மாநில மக்கள் ஒதுக்கி தள்ளி விடுவார்களோ?

திரைப்படங்களுக்கு தடை போடச் சொல்லி அதன் மூலம் பப்ளிசிட்டி தேடுவது, அதனால் அந்த திரைப்படத்திற்கும் பப்ளிசிட்டி கொடுப்பது இரண்டுமே தமிழகத்தில்தானோ?

இல்லை இந்த விளம்பரத்தை கேரள சேனல் எதிலும் ஒளிபரப்பவே இல்லையோ? 

பத்த வைச்சுட்டியே பரட்டை என்று யாரும் சொல்ல மாட்டீர்கள்
இல்லையா? 

3 comments:

  1. பத்த வச்சுட்டியே,ராமன்.

    ReplyDelete
  2. ஆஹா அருமையா பத்த வச்சிட்டீங்களே அவ்வ்வ்வ்வ்.....

    ReplyDelete
  3. ஒரு சில மலையாளிகள் பேஸ்புக்கில் கிளம்பிய போதும், அரசியல், சமூக, கலைத்துறையினர் கண்டுக்கவே இல்லை. நம்மை விட கேரள சமூகம் முதிர்ச்சியானதோ என்னவோ, யாமறியோம்..

    ReplyDelete