Wednesday, November 7, 2012

ஒபாமாவின் வெற்றி – இந்தியர்களின் ரத்தத்தில் எழுதப்பட்டது.





பாரக் ஒபாமா மீண்டும் அமெரிக்காவினுடைய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.

மாற்றம் என்ற முழக்கத்தை முன் வைத்து கடந்த முறை அவர் வெற்றி பெற்றார். எந்த ஒரு மாற்றத்தையும் அவரால் கொண்டு வர முடியவில்லை என்பது அவருக்கும் தெரியும்

அமெரிக்கப் பொருளாதாரத்தில் கொஞ்சம் கூட முன்னேற்றம் கிடையாது. பணி இழப்புக்கள் தொடர்கிறது. வேலையின்மை விகிதம் உயர்ந்து கொண்டே உள்ளது. வங்கிகள் திவாலாவது நிற்கவில்லை. பென்ஷன் நிதியில் காணாமல் போன பணம் போனதுதான். ஆப்கானிலும் ஈராக்கிலும் அமெரிக்கப் படைகளின் ஆக்கிரமிப்பு நீடிக்கிறது.  

அவரது எந்த தேர்தல் வாக்குறுதியும் நிறைவேறவில்லை. வரும் நான்காண்டுகளிலும் நிறைவேறப் போவதில்லை. எரிகிற இரண்டு கொள்ளிகளில் இந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று அமெரிக்க மக்கள் முடிவெடுத்துள்ளனர். அவ்வளவுதான்.

ஒபாமாவின் இந்த வெற்றிக்கு இந்தியா கொடுத்துள்ள விலைதான் பெரிது. தேர்தல் காலத்தில் அவர் இந்தியாவை மிரட்டுகிறார். முடிவு எடுப்பதில் இந்திய அரசுக்கு உறுதியில்லை என்று விமர்சிக்கிறார். அமெரிக்க முதலாளிகளின் குரலை அப்படியே எதிரொலித்தார்.

அதன் விளைவாகத்தான் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய மூலதனத்தை அனுமதிப்பது உள்ளிட்ட மோசமான முடிவுகளை மத்திய அரசு எடுக்கிறது, இன்சூரன்ஸ்துறையில் அன்னிய மூலதன வரம்பை உயர்த்த அனுமதித்து இந்திய மக்களின் சேமிப்பை சர்வதேச மூலதனம் கொள்ளையடிக்க பாதை உருவாக்குகிறது. அதே போலதான் பென்ஷன் நிதியும்.

ஒபாமாவின் மிரட்டல் இன்னும் நான்காண்டுகள் தொடரும் என்பதுதான் நாம் கவலையோடு பார்க்க வேண்டிய விஷயம். அமெரிக்க முதலாளிகளின் பிரதிநிதியான ஒபாமா மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியானதில் இந்தியர்கள் மகிழ்ச்சியடைய வேண்டிய அவசியமே எதுவும்  இல்லை.

ஆனாலும் பலர் மகிழ்ந்துள்ளார்கள், கலைஞர் உட்பட.

அவர்கள் தாங்கள் செய்வது எவ்வளவு பெரிய தவறு  என்பது புரியாமல் வாழ்த்தியுள்ளார்கள். பாவம் அப்பாவிகள்,

21 comments:

  1. அப்ப ராம்னி என்ன அமெரிக்க தொழிலாளிகளின் தலைவரா? போங்கையா போய் வேற வேலைய பாருங்க!

    -பாலா.

    ReplyDelete
  2. ஐயா, பாலா, கொஞ்சம் முதல் பதிவைப் பாருங்களேன், இரண்டுமே எரிகிற கொள்ளிங்கதான். அப்புறமா வந்து இந்த கமெண்ட வாபஸ் வாங்குங்க

    ReplyDelete
  3. //முடிவு எடுப்பதில் இந்திய அரசுக்கு உறுதியில்லை என்று விமர்சிக்கிறார்.//
    - மன்மோகன் சிங் பற்றிச் சரியாகச் சொல்லியிருக்கிறார். இதில் என்ன தவறு

    ReplyDelete
  4. ராமன் நீங்க சொல்வது தவறு? உங்கள் அரசியல் தலைவரை அமேரிக்கா ஒன்றும் தாயரித்து இந்தியாவிற்கு அனுப்பவில்லை. மக்கள் எப்படியோ அப்படிதான் தலிவன்; உங்களில் ஒருவன் தான் உங்கள் தலிவன். முடியாது என்று சொல்லவேண்டியது தானே?

    ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது:)|}

    ReplyDelete
  5. Good .., again you pull kalignar.

    ReplyDelete
  6. திரு நம்பள்கி ; அடிமையாக மன்மோகன்சிங் இருப்பதால்தானே அமெரிக்கா ஆட்டுவிக்கிறான் என்று நீங்கள் சொல்கின்றீர்கள். அடிமை ஒருவன் சிக்கினான் என்று ஆட்டுவிப்பவனை என்ன சொல்வது? மேலும் இந்தியாவிலும் கூட நிர்ப்பந்தங்களுக்கு அடி பணியாத நேரு, சாஸ்திரி, வி.பி.சிங் போன்ற நல்ல பிரதமர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மக்களின் தேர்வு. மன்மோகன்சிங் அமெரிக்க முதலாளித்துவத்தின் தேர்வு.

    ReplyDelete
  7. திரு அனானி, அமெரிக்க முதலாளிகளுக்கு ஆதரவாக முடிவெடுக்க தயங்குகிறார் என்பதுதானே ஒபாமாவின் விம்ர்சனம். அதற்குத்தானே இந்த மனிதனும் வெட்கம் கெட்டு அடிபணிந்தார்

    ReplyDelete
  8. திரு அனானி 2 ; கலைஞரை இழுத்ததற்கு நீங்கள் பாராட்டுகின்றீர்களா / திட்டறீங்களா?

    ReplyDelete
  9. known or unknown us following obama's vision for the last 4 yrs, if it clicks correctly they can come up from the situation (yes they can) , in other hand romey have to start from the scratch, so they took wise decision to keep obama in power.

    seshan

    ReplyDelete
  10. ஒபாமா மன்மோகன் அளவு மோசமில்லை. ஒபமாகேர் என்று எதிர்கட்சியினரால் சொல்லப்படும் மருத்துவ துறையில் மாற்றங்கள், ஆட்டோ மொபைல் இண்டஸ்ட்ரி ரிவைவல், போன்றவை ஒபாமாவிற்கு நல்ல பெயர் கொடுத்திருக்கிறது. கடந்த ஒரு வருடமாக வேலை வாய்ப்பில் முன்னேற்றம் தெரிகிறது. பல மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை குறைந்திருக்கிறது.
    ஒபாமா மட்டும் இல்லை. ராம்னி வந்திருந்தாலும் மன்மோகனை இப்படித்தான் ட்ரீட் செய்வார். அடிமைக்கு பட்டம் கட்டுவதே அடங்கி இருப்பார் என்பதால் தானே!

    ReplyDelete
  11. [[நேரு, சாஸ்திரி, வி.பி.சிங் போன்ற நல்ல பிரதமர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மக்களின் தேர்வு. மன்மோகன்சிங் அமெரிக்க முதலாளித்துவத்தின் தேர்வு.]]

    உங்கள் கருத்து புரியவில்லை! மன்மோகன்சிங் காங்கிரஸ் கட்சியின் பிரதமர தானே; காங்கிரசை மக்கள தேர்தலில் கழுவ வேண்டியது தானே! மக்கள் தானே தேர்ந்து எடுத்தீர்கள்; அப்புறம்? என் ஒரு நல்ல கட்சியை தேர்ந்து எடுக்கவேண்டியாது தானே?

    ப.ஜ.க வந்தால் தேனும் பாலும் ஓடும்; அவனும் அமெரிக்கா கிட்ட காசு வங்கத் போறான்; தப்பு இந்திய மக்கள் மேல்..!.

    ReplyDelete
  12. ****அதன் விளைவாகத்தான் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய மூலதனத்தை அனுமதிப்பது உள்ளிட்ட மோசமான முடிவுகளை மத்திய அரசு எடுக்கிறது,***

    யாருண்ணே நீங்க?

    உங்க ரத்தமும் இருக்கா அதுல???

    ஒபாமா மிரட்டுகிறாராம்! உடனே இவர் அவருக்கு பயந்துக்கிட்டு முடிவு எடுக்கிறாராம். ஏன்ணே சும்மா எதையாவது எதுகை மோனையுமா போட்டு ஒளறிக்கிட்டு?? :))))

    ஏன் நீங்க எல்லாருமா ஒண்ணு சேர்ந்து அமெரிக்காவுக்கு நாங்க கைக்கூலியா இருக்க மாட்டோம்னு அமெரிக்க கம்பெணிகளுக்கு ஊழியம் செய்யும் ஐ டி கம்பெணி, கால் செண்டர் எல்லாத்தையும் மூடிவிட்டுப் போயி ஏதாவது மின்சாரம் தயாரிச்சு ஒளிமயமா ஆக்க வேண்டியதுதானே??

    அப்படி செய்தால் அமெரிக்கர்கள் ரத்தத்தை இந்தியர்கள் குடிக்கிறது கொறையும்னுதான் சொல்ல வந்தேன். புரியுதா??

    என்ன நீங்க வெஜிடேரியனா?? என்னத்தைப் புரிஞ்சி என்னதை நீங்க கிழிக்க..

    ReplyDelete
  13. Simple. Mr. Raman is paid to hate America and love China. He is obedient to his masters and is not bothered about anybody's blood. avaru romba nallavarungoov.

    ReplyDelete
  14. யார் நின்னாலும் ஜெயிக்கிறது என்னமோ முதலாளிகள் தான்

    எரிகிற இரண்டு கொள்ளிகளுமே இந்தியாவிற்கு எதிரிதான்

    ReplyDelete
  15. \\அவரது எந்த தேர்தல் வாக்குறுதியும் நிறைவேறவில்லை. வரும் நான்காண்டுகளிலும் நிறைவேறப் போவதில்லை.\\ யாராயிருந்தாலும் இதுக்கு மேல ஒன்னும் செஞ்சிருக்க முடியாத என்று அமரிக்க மக்கள் நினைத்திருக்கலாம்.

    \\ஒபாமாவின் இந்த வெற்றிக்கு இந்தியா கொடுத்துள்ள விலைதான் பெரிது. தேர்தல் காலத்தில் அவர் இந்தியாவை மிரட்டுகிறார். முடிவு எடுப்பதில் இந்திய அரசுக்கு உறுதியில்லை என்று விமர்சிக்கிறார். அமெரிக்க முதலாளிகளின் குரலை அப்படியே எதிரொலித்தார்.\\ உன் நாட்டின் பாலிசியை எனக்கு சாதகமாக ஏடு என்று யாரையும் வற்ப்புறுத்த முடியாது.

    \\அவர்கள் தாங்கள் செய்வது எவ்வளவு பெரிய தவறு என்பது புரியாமல் வாழ்த்தியுள்ளார்கள்.
    \\ ஜெயிச்ச பின்னாடி வேற என்ன செய்ய முடியும்!! நம்மூரிலேயே தாத்தா, ஆத்தா யாரு ஜெயிச்சாலும் ஒலக நாயகனும், மற்ற நடிகர்களும் போய் ஒட்டிக் கொள்வதில்லையா?

    ReplyDelete
  16. //முடிவு எடுப்பதில் இந்திய அரசுக்கு உறுதியில்லை என்று விமர்சிக்கிறார்.// இது உண்மையள்ளவா???


    ReplyDelete
  17. Mr What is in a Name

    I appreciate you for your smartness. Instead of being Anonymous, You are under a different mask.

    Ok, I Hate America, Yes, being the Imperialist Power Exploiting the Countries like India.

    But I don't love China, and need not. All the
    communist baiters foolishly think like this.

    We Inspire from Not just China, also from Cuba,
    Venezula, Bolivia and other Countries where the
    Government is mainly for People. We Actually Envy them.

    I Love India. I am Paid for it. Yes, the
    Salary I got from LIC is from the savings of
    People. So I want to work for the betterment
    of Indian People.

    When the Indian Rulers succumb to the Pressure
    of Imperialist Evils such as Obama, I will
    continue to oppose, Continue to write against
    such activities

    ReplyDelete
  18. நம்பள்கி ஐயா, நீங்கள் சொல்வது சரி, மக்களிடமும்
    தவறு உள்ளது. நல்ல கட்சிகளை அடையாளம் கண்டுகொள்வதில் கோளாறு உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி இன்னும் விரிவாக, ஆழமாக அதிலும் குறிப்பாக ஹிந்தி பேசும் மாநிலங்களில் காலூன்ற வேண்டியுள்ளது.

    பழைய சொலவடை ஒன்று அல்லவா?

    உடலைக் கெடுக்கும் கள்ளை தேடிப் போய்
    வாங்குவார்கள். உடலுக்கு நல்லது செய்யும்
    மோரை தெருத்தெருவாக கூவி கூவி
    விற்றால்தான் வாங்குவார்கள்.

    ஆனால் மக்கள் மீது நம்பிக்கை
    இழக்க வேண்டிய அவசியம் இல்லை. பிரச்சினைகள் முற்றும் போது, நிச்சயம் வீதிக்கு வருவார்கள்.

    ReplyDelete
  19. திரு ஜெயதேவ்தாஸ் - ஒபாமா மிரட்டியது, மிரட்டப் போவது எல்லாம் உண்மை.

    மற்ற நாடுகளின் பாலிஸிகளில் தலையிடக் கூடாதா?

    அமெரிக்கா அதை மட்டும்தானே செய்து கொண்டிருக்கிறது.....

    ReplyDelete
  20. திரு ஜெயதேவ்தாஸ் - //ஜெயிச்ச பின்னாடி வேற என்ன செய்ய முடியும்!! நம்மூரிலேயே தாத்தா, ஆத்தா யாரு ஜெயிச்சாலும் ஒலக நாயகனும், மற்ற நடிகர்களும் போய் ஒட்டிக் கொள்வதில்லையா?//

    யதார்த்தமான உண்மை

    ReplyDelete
  21. நண்பர்களே போதும், இனியும் பின்னூட்ட்ங்கள் வேண்டாமே, அடுத்த பதிவிற்கு செல்லுங்களேன்

    ReplyDelete