திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மறைந்து
விட்டார். திமுக விற்கு ஒரு இழப்புதான். வெளிப்படையாக
பேசக் கூடியவர் இல்லாதது உட்கட்சி ஜனநாயகத்திற்கு
இழப்பு.
அவர் மறைந்தது அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து
அலைக்கழித்ததனால்தான் என்று கலைஞரும் ஸ்டாலினும்
சொன்னது மீண்டும் மீண்டும் தொலைக்காட்சிகளில்
காண்பிக்கப் படுகிறது.
கலைஞரின் அழுகையும் முக நூலில் பலரால் கிண்டல்
செய்யப்பட்டு வருகின்றது.
அந்த அழுகை பொய்யானதாக தோன்றவில்லை. ஆனால்
அந்தபேட்டியில் கேள்விகள் இந்த பதிலுக்காக தூண்டப்
பட்டதாக அமைந்துள்ளதும் நன்றாகவே தெரிகிறது.
சிறை அவரது உடல் நலனை கண்டிப்பாக பாதித்திருக்கும்.
ஆனால் விடுதலை ஆகி பல வாரங்களுக்குப் பிறகு
இப்போது பழி போடுவது அவ்வளவு பொருத்தமாக
தெரியவில்லை.
இந்த மரணம் சிறையில் இருக்கும்போதே நிகழ்ந்திருந்தால்
ஜெ மீதான தாக்குதல் இன்னும் கடுமையாக
இருந்திருக்கும்.
இப்போது பேசுவது
இன்னொரு " ஐயோ கொல்றாங்களே " பிரச்சாரத்திற்கான
ஒத்திகையா என்று தோன்றுகிறது.
ஏனென்றால் மரணத்திலும் அரசியல் ஆதாயம் தேடும்
மரபு இரு கழகங்களுக்கும் உண்டு.

மஞ்சள் துண்டு போட்டுக் கொண்டது மனைவி மகன்களை கோவில்களுக்கும், சாமியார் களைச் சந்திக்க அனுப்பியது போல ஒருத்தர் செத்ததற்கு அழுவதும் ஒன்று. இது பகுத்தறிவுக்கு எதிரான செயல். பிறந்தவர் ஒரு நாள் இறந்து தான் ஆக வேண்டும் இதை புரியாதவன் அழுவான், இதை உணர்ந்த பகுத்தறிவு வாதி எதற்கு அழ வேண்டும்? நான் பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொள்வதற்கு அர்த்தமேது? 40 வயதில் யோகா கற்றுத் தருபவனுக்கே மாரடைப்பு வரும் போது என்பது வயதை நெருங்கும் ஒருத்தருக்கு மாரடைப்பு வருவது வியப்பே இல்லை.
ReplyDelete//ஏனென்றால் மரணத்திலும் அரசியல் ஆதாயம் தேடும்
ReplyDeleteமரபு இரு கழகங்களுக்கும் உண்டு//
உண்மை.
பதவி இல்லையென்றாலே அரசியல் வாதிகளுக்கு
ReplyDeleteபாதி உயிர் போய்விடும் ,இப்போது மீதியும் போய் இருக்கிறது அவ்வளவுதான் .நல்ல காலம் தேர்தல் இல்லை இல்லையானால் போஸ்டர்களில் வந்திருப்பார்
ஒருவருடைய மரணத்திற்கு இவர் தான் காரணம் என்று சொல்வது மடமையிலும் மடமை. மனிதப் பிறப்பின் சூட்சுமம் இறைவனின் கையிலே ! விதியை முடிப்பது அவனின் கையிலே !
ReplyDelete