பஞ்சாங்கம்,
காலண்டர், பத்திரிக்கைகள், மத்திய மாநில அரசுகளின் விடுமுறை அறிவிப்புக்கள் என
அனைத்தும் சொல்வது நாளை 13.11.2012 அன்றுதான் தீபாவளி.
ஆனால் வேலூர்
மக்களில் பெரும் பகுதியினர் இன்றே தீபாவளி பண்டிகையை கொண்டாடி விட்டனர். புத்தாடை
அணிவது தொடங்கி பட்டாசு வெடிப்பது வரை காலை முதலே ஒரே உற்சாகக் கொண்டாட்டம்தான்.
ஏன் இன்றே
தீபாவளி?
நாளை
தீபாவளியோடு அமாவாசையும் சேர்ந்தே வருகிறதாம். ஆகவே நாளை மட்டன், சிக்கன் என
அசைவம் சமைக்க முடியாது. சுவையான உணவு இல்லாமல் பண்டிகையா? கொண்டாட்டமா?
அமாவாசையை
மாற்ற முடியாது, ஆகவே தீபாவளியை மாற்றியாச்சு. மட்டனோடு தீபாவளியையும்
கொண்டாடியாச்சு.
ரோஜாவை எந்த
பெயரிட்டு அழைத்தால் என்ன, அதன் மணம் மாறப் போவதில்லை. அது போல தீபாவளியை என்று
கொண்டாடினால் என்ன? மகிழ்ச்சிதானே முக்கியம்!
உண்மையான
மகிழ்ச்சியை எது தருகிறதோ, சாஸ்திரம், சம்பிரதாயம் என்பதற்காக அதை அடக்கி வைத்து
விட்டு பண்டிகை கொண்டாடுவதில் என்ன மன நிறைவு வந்து விடப் போகிறது !. அதற்கு பதிலாக
சாஸ்திரத்தை ஒதுக்கி வைத்து விட்டு நமக்கு பிடித்தமான முறையில், மற்றவர்களுக்கும்
மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் கொண்டாடுவது எவ்வளவோ மேல் அல்லவா?
இது போலவே
அர்த்தமில்லாமல் இன்னும் விடாப்பிடியாக பின்பற்றி வரும் சில சடங்குகளிலும்
மாற்றத்தை கொண்டு வந்தால் நன்றாக இருக்குமே!
சரி, எல்லோரும் மகிழ்ச்சியா, ஜாக்கிரதையா, நல்லா
சாப்பிட்டு தீபாவளி கொண்டாடுங்க,
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
உண்மை தாங்க சாஸ்திரம் சம்ரதாயம் எல்லாம் நமக்காக நாமே உருவாக்கியது தானே மாற்றித்தான் பார்ப்போமே.
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.