Saturday, November 10, 2012

தர்மபுரி கலவரத்தின் குற்றவாளிகள் காடுவெட்டிகளும் கருப்பையாக்களும் அம்மா, ஐயாக்களுமே




தர்மபுரி நத்தம் காலனி தலித் மக்கள் தாக்கப்பட்டது தமிழகம் இன்னும் ஜாதியின் கோரப் பிடியில்தான் சிக்கித் தவிக்கிறது என்பதன் அடையாளம்.

காடுவெட்டி குரு ஜாதிய மறுப்பு திருமணத்திற்கு எதிராக வெறியோடு பேசுகிறார். அண்ணல் அம்பேத்கர், மாமேதை காரல் மார்க்ஸ், தந்தை பெரியார் ஆகியோருக்கு தனது தைலாபுரம் தோட்டத்து வீட்டிற்கு முன்பாக சிலை திறந்து வைத்துள்ள மருத்துவர் ஐயா, மாடர்ன் சின்னய்யா இருவரும் அதை வேடிக்கை பார்க்கிறார்கள்.

கோவையில் மணிகண்டன் என்றொரு நபர் கலப்பு திருமண எதிர்ப்பு மாநாடு நடத்துகிறார்.

ஆளும் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினரும் பல கட்சிகள் கண்டவருமான பழ.கருப்பையா, சாதிய மறுப்பு திருமணங்களுக்கு எதிராக விஷம் கக்குகிறார்.

இந்த சம்பவங்கள் அனைத்தையும் தமிழக அரசு மவுனமாக எதிர்க்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி தவிர வேறு எந்த கட்சியும் கண்டிக்கவும் இல்லை.

இந்தப் பேச்சுக்கள் எல்லாம் ஜாதிய மறுப்பு திருமணங்களுக்கு எதிரான கோபத்தையும் வெறியையும் தூண்டிவிடும் நோக்கமுடையவை. அந்த நோக்கம் வெற்றி பெற்றுள்ளது. அதனால்தான் தனது மகள் தலித் இனத்தைச் சேர்ந்த ஒரு பையனை திருமணம் செய்து கொண்டதால் அந்த தந்தை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஜாதிய மறுப்பு திருமணங்களுக்கு எதிரான கருத்துக்களை விதைத்தவர்களையும் கண்டு கொள்ளாமல் இருந்தவர்களையும் அந்த மனிதனின் சுற்றத்தாரையும் தற்கொலைக்கு தூண்டியதாய் கைது செய்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்.


6 comments:

  1. விஷம் கொண்டவர்களுக்கு எதிரான சிறந்த பதிவு. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. Fully agree with you!!

    How about the Veeramani & co who fought valiantly against Brahmanal Cafe and Splendour Iyer and ignored this?

    You are right. Only CPM is truly fighting. Pity is that the leader of the other communist party (Thaa. Pandiyan) went to the extent to justify the Pappapatti/Keeripatti Panjayath Election blockade by thevars.

    To all these guys, samathuvam is just fighting Brahmins!!

    Suresh

    ReplyDelete
  3. Mr Suresh,

    It is True that Veeramani did not raise his voice against this Attack. If I remember correct He never sided with Dalits on Any Issue. But
    that does not mean that His Struggle against Brahmnal Cafe is not correct. It is a deserving Issue. The Feeling of High Caste percolated to others only from them.

    It is always better not to speak on Thaa.Paa

    ReplyDelete
  4. உங்கள் சமூக சிந்தனைகள் சிறப்பாக உள்ளன.

    இதுவா பெரியார் வாழ்ந்த மண் .. வேதனை.
    சாதி இருக்கிறது என்பானும் உள்ளானேடா என்று புரட்சி கவிஞர் பாடினார்..
    படிப்பும், அறிவும் , பணமும் இருந்து என்ன பயன். மனிதனாக வாழ வழி இருந்தும் தேடி திரிந்து மிருகமாக வாழ்வது இந்த சாதி பார்க்கும் மாக்கள்.
    இவன் மகன் உடலுக்கு மருத்துவமனையில் இரத்தம் கொடுக்கும் போது என்ன சாதி என்று கேட்பானா?

    ReplyDelete
  5. எங்கோ நடந்த சாதி கலவரத்தை ஓட்டு மொத்த வன்னிய மக்களை குறை கூறுவதாக உள்ளது

    ReplyDelete
  6. திரு அனானி, எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தையும் குறிப்பிடாதபோது நீங்களாகவே ஏன் ஒப்புதல்
    வாக்குமூலம் தருகின்றீர்கள். குற்றமுள்ள
    நெஞ்சின் குமுறலோ? துவக்கப்புள்ளி காடுவெட்டி
    குரு என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க
    முடியாது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை,
    நிராகரிக்கிறோம் என்று சொல்லுங்களேன், குருவின்
    பேச்சு எங்களை தூண்டாது என்று சொல்லும் நிலை வேண்டாமா?

    ReplyDelete