இது
நேற்றைக்கு பதிவு செய்திருக்க வேண்டியது.
நேற்று வீடு
திரும்ப காலதாமதம் ஆகி விட்டது.
ஆனாலும்
பரவாயில்லை,
முடிவு பற்றிய
பதிவு
இன்னும் சில
நிமிடங்களில்
அமெரிக்க
ஜனாதிபதி தேர்தல் முடிந்திருக்கிறது. தற்போதைய அதிபர் ஜனநாயகக் கட்சியின் பாரக்
ஒபாமாவா, குடியரசுக் கட்சியின் மிட் ரோம்னியா யார் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்
படுவார்கள் என்ற சூடான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
இதிலே பாரக்
ஒபாமா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது இந்தியாவிற்கு நல்லது என்ற முழக்கம்
கூட தென்படுகிறது. நான் இந்தியனாக இருப்பதால் எனக்கு வாக்குரிமை இல்லை,
இருந்திருந்தால் ஒபாமாவிற்கு வாக்களிப்பேன் என ஒரு பிரபலம் முக நூலில்
பதிவிட்டதைப் பார்த்து சிரிப்புதான் வந்தது.
ஒபாமா, ரோம்னி
இருவருமே உலக முதலாளித்துவத்தின் பிரதிநிதிகள். முதலாளிகளின் லாபங்களை
பெருக்குவதற்காக பணிக்கப்பட்டவர்கள். அதற்காக உலகின் மற்ற நாடுகளை மிரட்டுவதற்கான
அதிகாரம் அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.
இதிலே
ஒருவரின் நடவடிக்கை சற்று முரட்டுத்தனமாகவும் மற்றொருவரின் செயல் மென்மையாகவும்
இருக்கும். ஆனால் நோக்கம் ஒன்றுதான்.
இந்த
இருவராலும் அமெரிக்காவின் சாமானிய மக்களுக்கே பலன் கிடையாது என்கிற போது இந்தியாவிற்கு யாரால் நல்லது என்ற கேள்வியே
அர்த்தமற்றது.
எரிகிற இரண்டு
கொள்ளிகளுமே கெட்ட கொள்ளிகள்தான்.
No comments:
Post a Comment