Sunday, November 25, 2012

எனக்கு அச்சமாக இருக்கிறது..... உங்களுக்கு?

 


இரு சக்கர வாகனத்தில்  அதி வேகமாய் விரைவதை
ஒரு சாகசம் என கருதி தங்களுடைய வாழ்வோடும்
மற்றவர்களின் வாழ்வோடும் விளையாடும்  சில
இளைஞர்களுக்கு  அன்பான ஒரு திறந்த மடல்.

அன்பான நண்பனே,

மோசமான சாலைகள், குறுகிய சாலைகள்,
அதிலே மேடும் பள்ளங்களும் அடிக்கடி
வந்தால்தான் அவை சாலைகள் என்று
இன்றைய இலக்கணங்கள் சொல்கின்றன.

சாலையின் அளவை விட, தரத்தை விட
அதிகமான வாகனங்கள்,
நத்தையாய் ஊர்ந்து போகும் சில
தருணங்கள், அப்போது காற்று 
மண்டலத்தையே புகைதான் ஆக்கிரமிக்கும்.

இந்த நிலையிலும் கூட உன்னால்  மட்டும்
எப்படி இவ்வளவு வேகமாக வண்டி
ஓட்ட முடிகிறது?

முன் செல்லும் வண்டிகளை முந்திச்
சென்று கொண்டே இருப்பதற்காக 
ஏதேனும் விருது அளிக்கப் போகிறார்களா என்ன?

வளைவில் முந்தாதே என்று ஒவ்வொரு
ஆட்டோவிலும் எழுதி வைத்துள்ளார்கள்.
நீயோ அந்த ஆட்டோக்களையெல்லாம் கூட
வளைந்து வளைந்து முந்துகிறாய்..

இவ்வளவு வேகமாக சென்று என்னதான்
சாதிக்கப் போகிறாய்?

இல்லை இது என்ன பந்தயத்திற்கான
மைதானமா?

அவ்வளவு அவசரமென்றால் சற்று
முன்பாக புறப்பட்டிருக்கலாமே!

கூடுதல் விலை கொடுத்து வண்டி
வாங்கி உனக்கு மகிழ்ச்சி அளித்தனர்
உன் பெற்றோர்.

கூடுதல் வேகத்தால் அவர்களின் 
மகிழ்ச்சியை நீ பறித்திட வேண்டுமா?

உந்தன் வேகம் உன்னை மட்டுமா
பாதிக்கப் போகிறது?

நீ வேறு ஒருவன் மீது மோதினால்
அவனும்தானே அடிபடப் போகிறான்?

உனது தவறுக்கு அவனுக்கு 
தண்டனையா?

இப்போது நீ மிச்சப்படுத்தும் நேரத்தை
விட உனக்கு விபத்து நேர்ந்தால்
விரயமாகும் நேரம் பல மடங்கு
அதிகம்.

உன் வேகத்தைப் பார்த்தால்
எனக்கு  அச்சமாக இருக்கிறது.

பணிவோடு சொல்கிறேன்.
வேகம் தவிர்,

உன் மீது உள்ள 
உண்மையான அக்கறையோடு.

( வேகமாய் விரையும் சில இளைஞர்களைக்
கண்ட கவலையோடு எழுதியது)4 comments:

 1. Good one, but there are not many listeners.

  ReplyDelete
 2. எத்தனை பேர் இதைக் கேட்பார்கள்?

  ReplyDelete
 3. நேற்று முன் தினம், கோவையின் ஒண்டிப்புதூர் சிக்னலில் ஒரு கல்லூரி மாணவன் அடிபட்டு இறந்து விட்டார்.(அவர் ஆத்மா சாந்தியடையட்டும்).

  நான்கு நொடிகள் அல்லது அரை நிமிடம் நின்று நிதானித்து சென்றால் ஏன் இந்த நிலை வருகிறது?

  சிக்னலில் யாரும் எவருக்கும் இடம் கொடுக்காமல் முந்திச் செல்வதிலே மட்டுமே குறியாய் இருக்கின்றார்கள்.

  கோவை சிக்னல்களில் நின்று செல்வது பெரும் பீதியைக் கிளப்புகிறது. யாருக்கும் பிறரைப் பற்றிய அக்கரை முற்றிலும் இல்லை.

  எவன் எக்கேடு கெட்டால் என்ன, நான் முன்னே போக வேண்டும் என்று அவசரப் படுகின்றார்கள். இதுதான் ஆக்சிடெண்டுக்கு காரணம்

  ReplyDelete
 4. சாலைகளைப் பராமரிப்பதில் கவனமில்லை! வாகனத்தை தயாரித்து விற்பவர்களின் கை ஓங்கி இருக்கிறது.! டாக்சி,லாரி,கார் சொந்தக்கரர்கள்கூட வைக்க இடமில்லாமல்தவிக்கிறார்கள். குட்டி வான்கள்,ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதே சாலைகள் தான். அதீத லாபத்திற்காக வாகனங்களையும்
  சாலைகளில் ஒட்டும்வெறித்தனம்.எந்த வகையிலும் இதனை கட்டுபடுத்த விரும்பாத R.T.O.சாலை விதிகளை மதிக்காத மக்கள்! ஒழுக்கமற்ற அரசு ! என்ன செய்ய?---காஸ்யபன்.

  ReplyDelete