தர்மபுரி கலவரத்தில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்
ஒன்று உண்டு.
268 வீடுகளை அடித்து நொறுக்கி தீ வைத்துக் கொளுத்திய
ஜாதி வெறி வன்முறைக் கும்பல், அந்த வீடுகளில் உள்ள
பீரோக்களை உடைத்து உள்ளே இருந்த பணத்தையும்
நகைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு போயுள்ளனர்.
கோயில் நகை மட்டும் ஐந்து கிலோ கொள்ளையடிக்கப்
பட்டதாக பத்திரிக்கை தகவல் சொல்கிறது.
பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டதால்
வந்த கோபம் என்றால் தாக்குதலோடு நின்று போயிருக்கும்.
கொள்ளையும் சேர்ந்து கொண்டது என்றால் இந்தப் பகுதி
மக்களில் சிலர் முன்னேறியுள்ளதால் ஏற்பட்ட வயிற்றெச்சலும்
இந்த கலவரத்திற்கு காரணம் என்று தோன்றுகிறது.
தலித் இனத்தைச் சேர்ந்த மண மகன் கூடாது,
ஆனால் அவர்கள் உழைத்துச் சேர்த்த பணத்தை மட்டும்
எடுத்துக் கொண்டு செல்வார்கள்...
பணத்திற்கு தீண்டாமை கிடையாது, மனிதனுக்கு மட்டும் உண்டு...
என்னங்கடா நியாயம் இது?
பணம் சாதியை கடந்தது
ReplyDeleteஅரசியல் கட்சிகளை சொல்ல வேண்டும் இன்னும் தூக்கி பிடித்து வரும் சாதிய கோட்பாடு, ஆதரவு இன்னும் பிற காரணங்கள்
அக்கிரமம்
ReplyDeleteஅண்ணே நீங்கள் சொல்லியுள்ளது முற்றிலும் உண்மை. நெத்தியடி கேள்வி. அவர்கள் உழைத்து சேர்த்த பணம் இப்படியா போக வேண்டும். வேதனை.
ReplyDeleteகோவிலிலும் இதே தான். வியர்வை விழுந்து உழைத்த உழைப்பும் அதன் பயனான உணவும் வேண்டும். ஆனால் உழைத்தவன் தீண்டத்தகாத மனிதன். வெட்க கேடு . உங்கள் குரல் நீதி மற்றும் தர்மத்தின் பக்கம் நின்று பேசுகிறது.
இதெற்கெல்லாம் மூல காரணமான பார்பனியமும் அதன் தொடர்பான ஆதிக்க சாதி வெறி ஒழிந்தால் சமுகத்தில் அனைவரும் நலமாக வாழ
முடியும்