Tuesday, November 20, 2012

இனிமே எவனாவது எழுதினா ஜெயில்தான்.





சின்மயி பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்கள், கார்த்தி சிதம்பரத்தை விமர்சித்தவர்கள், இந்த வரிசையில் பால் தாக்கரேயை விமர்சித்த ஒரு பெண், அதற்கு லைக் கொடுத்த ஒரு பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் சகலருக்கும் ஆட்சியாளர்கள், அவர்கள் மத்தியில் இருக்கலாம், தமிழகத்தில் இருக்கலாம், மற்ற மாநிலங்களில் இருக்கலாம், ஆனால் எல்லோரும் சேர்ந்து அளிக்கும் எச்சரிக்கை என்னவென்றால்,

உண்மையைப் பேசாதே...

கருத்துச் சுதந்திரம் என்பது எங்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டவர்களுக்கு கிடையாது.

ப்ளாக் ,முகநூல் ஆகியவற்றில் ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்தால்

மொக்கை ஜோக், கடி ஜோக், கதைகள், காலட்சேபம். சினிமா இவற்றைப் பற்றி வேண்டுமானால் எழுதுங்கள்,

அரசியல் பற்றியோ, மக்கள் பிரச்சினை பற்றியோ எழுதாதே,

மீறி எவனாவது எழுதினால் ஜெயில்தான்.

பின் குறிப்பு 1 : நாமார்க்கும்  குடியல்லோம், நமனை அஞ்சோம்,
                  நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே

என்றெல்லாம் ஆண்டவனுக்கே சவால் விட்ட புராண கால வரலாறெல்லாம் உண்டு.

அடித்தால் திருப்பி அடி, வாடா என்றால் போடா என்று சொல் என்று செங்கொடி இயக்கப் புதல்வன் தோழர் சீனிவாச ராவ் எழுச்சியூட்டியது  நிகழ்கால வரலாறு.

ஆகவே இந்த மிரட்டலுக்கெல்லாம் அடிபணியோம்,

பின் குறிப்பு 2 : விஷம் விதைத்தவன் என்ற தலைப்பில் இரண்டு தினங்கள் முன்பு எழுதியிருந்தேன். நச்சுச் செடிகள் தனது வேலையை மீண்டும் காண்பித்து விட்டது.


2 comments:

  1. ஆனால் சில பதிவர்களே இவ்விஷயத்தில் அதிகாரவர்க்கத்தினருக்கு ஆதரவாக எழுதுவதை என்னவென்று சொல்வது. ஒநாயை நம்பிய வெள்ளாட்டின் கதைதான் நினைவுக்கு வருகிறது!

    ReplyDelete
  2. //மீறி எவனாவது எழுதினால் ஜெயில்தான்.//

    ஏனுங்க, ஜெயில் களி நல்லா இருக்குமுங்களா?

    ReplyDelete