Sunday, November 18, 2012

காலமானதால் கண்ணீர் இல்லை, கள்ளத்தனமாய் உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி

 விஷம் விதைத்தவன்

வேற்று மாநிலத்துக்காரனை,
வேற்று மதத்தவனை
வெறுக்கக் கற்றுக் கொடுத்தவன்,

கருங்காலி சங்கங்கள்
கருத்தரிக்க 
காரணமாய் இருந்தவன்,
நிர்வாகங்களோடு
கரம் கோர்த்து 
போராட்டங்களை
உடைத்தவன்.

வியர்வை வழிந்தோடும்
தொழிலாளிகள் முகத்தில்
ரத்தத்தை வழியவிட்டவன்,

ஸ்பானர் தூக்கிய கரங்களை
கத்தியும் கடப்பாறையும் 
குண்டாந்தடியும் ஏந்த
வைத்த 
உலக மகா யோக்கியன்,

மும்பை நகரம் என்றாலே
அத்தனை பேரையும்
அஞ்ச வைத்து
அலர வைத்தவன்.

காலம் முடிந்தது,
கண்ணீர் வரவில்லை,
கள்ளத்தனமாய் உள்ளத்தில்
பொங்கும் மகிழ்ச்சியை
மறைக்க வழியில்லை.

தீபாவளி கொண்டாட
எல்லா நியாயங்களும்
உண்டு.

ஆனாலும் முடியவில்லை,
அவன்
விதைத்து விட்டுப் போன
விஷச்செடிகள் இன்னும்
இருக்கிறதே!



4 comments:

  1. சுப்புராம்,சிங்கபூர்November 18, 2012 at 6:35 PM

    மும்பைக்கு நிறைய தீவாளிகள்

    ReplyDelete
  2. சகோ.ராமன்

    ஆம்..சிவசேனா என்பதே தமிழர்களுக்கும் எதிரானது என்று அறியாமலேயே மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..நடிகர் ரஜினி வெளி உலகம் அறியாதவர் என்று அடிக்கடி நிரூபிப்பார்.,தந்தையை போன்று வழிகாட்டியவராம் .. !!!

    எதுக்கு பேசுகிறோம் என்றே தெரியாமல் பலர் பேசுவது வேதனையானது ...பார்ப்பன் ஊடகங்கள் தான் இவரை தியாகச்செம்மல் போல காட்டுகின்றன..

    * இஸ்லாத்துக்கு எதிராக இந்து தற்கொலை படையை நிருவியவராம்..

    * பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அத்வானி வகையறாக்களே மவுனமாக இருந்த போது அப்போதும் தனது நிலைப்பாட்டை (!!!) துணிச்சலாக சொன்னவராம் !!!

    மேற்கூறியவை சிலாகித்து டிவியிலும் பத்திரிக்கைகளிலும் சொல்லப்பட்டவை..குஜராத்திற்கு டிசம்பர் 20 தேதி மீண்டும் தீபாவளி என்று மோடி சொல்லி இருக்கையில் பிற மாநில மக்களுக்கு நேற்றே மீண்டும் தீபாவளி வந்ததை அறிய தவறி விட்டார் போலும்..!!!

    (பால் தாக்கரேவுக்காக நாமும் வருந்துகிறோம்..இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் பார்க்காமல் போனதற்கு !!! ..ஹி ஹி ஹி)

    அமைதியும் சமத்துவமும் எங்கும் மலரட்டும் ...!!!

    நன்றி !!!

    ReplyDelete
  3. இந்த இடுகையை தவிர்த்திருக்க வேண்டும் தோழா! ---காஸ்யபன்

    ReplyDelete
  4. கள்ளத்தனமாக எதற்கு, வெளிப்படையாகவே மகிழ்ச்சி கொண்டாடலாமே.

    ReplyDelete